வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி
பெண்கள் வலம் வருவது நல்லது!
நடுத்தரவர்க்கப் பெண்கள் வெளியில் அதிகம் வராததால் அவர்கள் மீது வெயில்படுவதில்லை. இதனால் எலும்பு மெலிவு நோய் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நோய் கண்டவர்களின் எலும்புகள் எளிதில் உடையும் தன்மையாகவே மாறிவிடும். எலும்பு மென்மையாக மாறும்போது அதில் துவாரங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 100 கிராம் சுண்ணாம்புச் சத்து தேவை.
இந்தியாவில் ஆறுகோடியே பத்து இலட்சம் பேர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெண்களே அதிகம். காரணம், இவர்கள் மீது இயற்கை வெளிச்சமோ வெயிலோ படாததுதான்.
எலும்பு மெலிவு வெளியே எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் நோயாகும். இதை ஆஸ்டியோ போரேசிஸ் என்றழைக்கின்றனர்.
அதிகம் மது அருந்தும், புகைக்கும் ஆண்களுக்கும் உழைப்பு இல்லாதவர்களுக்கும் கூட இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய் முற்றினால் கைகால்களை அசைக்க முடியாது. பெண்களும் ஆண்களும் சுண்ணாம்புச் சத்து வைட்டமின் ‘டி’யும் உள்ள உணவுவகைகளை நன்று சாப்பிட வேண்டும். தினமும் மெகா தொடர்களையும், திரைப்படங்களையும் டி.வி.யில் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இராமல், வெயிலில் சிறிது நேரம் உலாவவும், காலை அல்லது மாலை வெயிலில் உடற்பயிற்சி செய்யவும். மாதவிலக்கு நிற்கும் சமயத்தில் அவதிப்படும் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இந்த எலும்பு மெலிவு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது.
வைட்டமின் ‘டி’யும் சுண்ணாம்புச் சத்தும் கிடைக்க பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய் இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் ‘டி’யை மாத்திரையாகவும் சாப்பிடலாம்.
சுண்ணாம்புச் சத்து நன்கு கிடைக்கவேண்டுமானால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவுச் சப்பாத்தி, தண்டுக்கீரை, காரட், ஆரஞ்சுப்பழம், பாதாம்பருப்பு, வால்நட் பருப்பு முதலியவற்றையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வரவும். இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் முதலியன இருந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியே. இந்த உணவுவகைகளைத் தொடர்ந்து சேர்த்து வந்தால், எலும்பு மெலிவு நோய் முற்றிலும் குணமாக்கப்பட்டுவிடும்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
Related Posts Title































