Friday, 3 Oct 2008

Vaiko oppose joint action of India and Srilanka

இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை வேண்டாம்!: வைகோ

சென்னை: த‌‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் தா‌க்க‌ப்படுவதை தடு‌க்க இ‌ந்‌தியாவு‌ம், ‌இலங்கையும் அ‌றி‌வி‌த்து‌ள்ள கூ‌ட்டு நடவடி‌க்கை ‌தி‌ட்ட‌த்தை உடனடியாக‌க் கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.தி.மு.க. பொதுச்​செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழக மீனவர்களைத் தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும் ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், இலங்கை அரசு நயவஞ்சகமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதிதிட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளது.

நேற்றைய தினம் ‌இலங்கை‌யின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹித் பொகல்லகாமா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பின்பு, மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இருநாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை அறிவித்து உள்ளனர்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டு நடவடிக்கை கூடாது. இந்திய அரசின் நடவடிக்கையை, வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்’ என்று கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

Related Posts Title


One Response to “Vaiko oppose joint action of India and Srilanka”

  1. Srilanka » Doing business in India is tough | India Business Blog

    […] Vaiko oppose joint action of India and Srilankaஇந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை வேண்டாம்!: வைகோ சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியாவும், இலங்கையும் … […]

Leave a Reply