Friday, 3 Oct 2008

2008/10/03 Punch Balu

durai-murugan.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

வீரத்தின் விளைநிலமான கம்யூனிஸ்ட்டுகளின் கால்கள் நான்கைந்து ஸீட்டுகளுக்காக விஜயகாந்தின் வீட்டு வாசலை மிதிக்கலாமா? -அமைச்சர் துரைமுருகன்.
சுயநலமாக செயல்படுவதும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதும் உங்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன? அவர்களும் தான் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே! 

தமிழகத்தில் மந்தரி ஆகும் கனவு தகர்ந்துவிட்டதே என்ற கேள்விக்கு….

”கனவு தகர்ந்துவிட்டது என்று கூற முடியாது. விருப்பம் நிறைவேறவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸ் கனவு என்பது எங்கள் தலைமையில் அரசு அமைவதுதான். அதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.”
- பீட்டர் அல்போன்ஸ் பதில்
தூங்குவதிலா தீவிரம்? அரசு அமைப்பது கனவுதான் என்றால், 40 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எப்போது விழிப்பீர்கள்?

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். தனிமரமாக நின்று காங்கிரஸ் மட்டும் தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கலைஞர் மதிக்கவில்லை.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி
இதைத் தட்டிகேட்க காங்கிரஸ்காரர்களுக்கே தில்லு இல்னேன்னும்போது நீங்களாச்சும் கேட்டீங்களே… சந்தோஷம். ஆமாம் நீங்கள் எப்போது காங்கிரசின் கொ.ப.செ. ஆனீர்கள்? மது ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி எல்லாம் போரடித்துவிட்டதா? தி.மு.க., காங்கிரஸ் இடையே  பற்றிக்கொண்டால், அதில் குளிர் காயலாம் என்பதுதானே தங்கள் எண்ணம்?

மனம், கடவுள் இரண்டும் மிகவும் ஒத்திருக்கும் இரண்டு விஷயங்கள். மனம் எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது. கடவுள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாது. விலாசம் இல்லாதவர்களெல்லாம் நெருக்கமாகத் தான் இருப்பர் போல. உயர்ந்த எண்ணம் எது என்ற வரையறுப்பதில் சிக்கல் உள்ளது. நான் முதல்வர் ஆக வேண்டும் என நினைத்தால் அது உயர்ந்த எண்ணம் இல்லை. அது சந்தர்ப்பம் பார்ப்பதுதான்.
-விழா ஒன்றில் நிதி அமைச்சர் அன்பழகன்
உங்கள் பேச்சு தத்துவம் போலிருந்தாலும் அது தத்துவம் அல்ல. இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கறைக் காட்டும், மனதை செலுத்தும் அல்லது அதற்கு மட்டுமே தன்னை தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் புலம்பல் போலதான் உள்ளது. முதல் இடம் எப்போதுமே இரண்டாவது இடத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

Related Posts Title


Leave a Reply