தைவான் சென்று வந்தேன்
தைவானியர்கள் மீது வந்த கோபம்!
தைவானியக் குடியேற்ற (இமிக்ரேஷன்) அதிகாரி என்னையும் ஒரு சில இந்தியர்களையும் மட்டும் தனியே ஒதுக்கி வைத்திருந்த கணங்கள், என் வாழ்நாளின் இரணமான பகுதிகள் என்பேன்.
எவ்விதக் குற்றமும் செய்யாத எங்களைக் கைதிகள் போல் நடத்துவானேன்? சேர்ந்து உட்கார்ந்து பேசக்கூடாது என்கிற கட்டுப்பாடு ஏன்? நாங்கள் என்ன சதிக்காரர்களா? என் சம்பந்தப்பட்ட தாள்களை ஆராய்நதவர், என்னை அழைத்தார். அபத்தமாகச் சில கேள்விகளைக் கேட்டார். ஒவ்வொரு பதிலையும் கம்ப்யூட்டரில் பகிர்ந்து கொண்டார் ”அடிப்படையில் நான் எழுத்தாளன்” என்று சொல்லி என் கைப்பையில் இருந்த என் ஆயிரம் ஒரு பக்கக் கட்டுரைத் தொகுப்பை மேசையில் சற்றே கோபமாய் வைத்தேன் பாருங்கள். நூலின் பருமனைப் பார்த்து மிரண்டுவிட்டார் அந்த அதிகாரி.
”ஓ! யூ ஆர் எ ரைட்டர்!” என்று எழுந்தவர் விடுவிடு என்று எங்கோ போனார். வந்தவர், நல்ல மாறுதல் காட்டினார்.
”ஒ.கே. சார். தாங்க்யூ” என்று நின்றுகொண்டே சொன்னார்.
அட! இந்த தேசத்தில் ஒரு முரட்டு நூல் எழுதிக் காண்பித்தால்தான் மதிப்பீர்களாக்கும்?
மற்றவர்கள் என்னை ஏக்கமாய்ப பார்க்க, நான் நகர, இமிக்ரேஷன் பகுதியையும் கடந்து சுங்கப்பகுதி வரைக்கும் கூடவே வந்து விட்டு விட்டுப் போனார் இன்னோர் அதிகாரி.
இது என்ன உதவியா, மரியாதையா? புரியவில்லை.
விமான நிலையமே காலியாக இருந்தது. சுங்க அதிகாரிகள் வட்டமேசை மாநாடு நடத்திக் கொண்டிருக்க, என் பெட்டிகள் எங்கே கிடக்கின்றனவோ தெரியவில்லையே! என்கிற உணர்வு மேலோங்கி நின்றது.
எந்த விமானத்தின் பெட்டிகள் எந்த பெல்டில் வரும் என்கிற அறிவிப்பெல்லாம் நின்று, பெல்டின் சுழற்சியும் நின்று போயிருந்தது.
பெட்டிகள் வந்து விழும் அந்தப் பகுதி ஒரு பெரிய மைதானம் போல் மிகப் பெரிதாக இருந்தது.
எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசியிருப்பார்களா? எவரும் எடுத்துக் கொள்ளவில்லையே என்று வெடிகுண்டுப் பிரிவினர் எடுத்துப் போயிருப்பார்களா?
எவரிடமாவது கேட்கலாம் என்றால் எவரும் இல்லை. விமானம் வந்திறங்கி எவ்வளவு நேரம் ஆகியிருந்தால் இப்படிப்பட்ட நிலைமைகள் - காட்சிகள் உருவாகியிருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
நாயாயப் பேயாய் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் அலைந்து தவித்து ஒரு வழியாகக் கேட்பாரற்று அநாதையாக கிடந்த என் உடைமைகளைச் சேகரித்தேன். பக்கத்தில் டிராலிகள் ஏதும் இல்லை. ஒவ்வொன்றும் 32 கிலோப் பெட்டிகள், கைப்பெட்டி வேறு. சே! ஏன் இவ்வளவு எடையைச் சேர்த்தோம். இனிமேல் கூடவே கூடாது என்று பிரசவ வைராக்கியம்போல் ஒரு வைராக்கியமும் உருவானது.
இந்த இயலாமை கோபமாக உருவெடுத்தது. இவ்வளவுக்கும் காரணம் இவர்கள். அதென்ன இந்தியர்களை மட்டும் தனிமைப்படுத்தி இரகசியமாக விசாரிப்பது? ‘டெல்லியில் உள்ள தைவானியத் தூதரகத்திலோ தைவானில் உள்ள இந்தியத் தூதரகத்திலோ புகார் தரவேண்டும்.
‘டேய் மரம(ண்)டையா! டெல்லியில் தைவானியத் தூதரகமும் இல்லை. தைவானில் இந்தியத் தூதரகமும் இல்லையடா’ என்று அடுத்த நினைவு வந்து தலையில் ஒரு தட்டுத் தட்டியதைப்போல் இருந்தது.
சீன நல்லுறவு முக்கியம்னு இந்தியா நினைக்கிறதுனால தூதரகங்கள் நிறுவப்படவில்லை அல்லவா? சரிசரி.
ஆனால் இங்கே உள்ள இந்தியச் சமூக அமைப்பிடமாவது புகார் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மெல்ல வலுவானது.
தைவானில் தங்கியிருக்கும் நாள்களில் எப்படியாவது இந்த விஷயத்தை ஊதிப் பெரிதுபடுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தவை இந்த 64+8 கிலோக்கள் என்பேன்.
ஆனால் யாரிடம் கேட்பது? பார்த்துக்கொள்வோம். ஆனால் விடப்படாது!
வெளியில் வந்தபோது நம்மூர் மாதிரி தைவானிய டாக்சிகாரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் கச்சாமுச்சா என்று புரியாத மொழியில் பேச,
”பாஸ்! வேர் டு யூ வாண்ட் டு கோ பாஸ்?” என்றார் ஆங்கிலத்தில்.
‘அட! இத பாருய்யா! புரியாத பாஷை மத்தியில் ஒருத்தன் நமக்குப் புரிஞ்ச பாஷையாப் பேசுறான்!’ கைகொடுத்துக் குலுக்கினேன்.
”எவ்வளவு பாஸ் ஒய்.எம்.சி.ஏ. போக?” ரொம்ப நாள் பழகினவனைப்போல் உரிமையாய்க் கேட்டேன்.
”200 டாலர் பாஸ்!”
”என்னது! அமெரிக்க டாலரா?”
“இல்ல பாஸ்! தைவானிய டாலர் பாஸ்!”
தோளைத் தொட்டேன். ”பாஸ்! நீங்க இப்போ டாக்சி டிரைவரும் இல்லை. நான் வெளிநாட்டுப் பயணியும் இல்லை. உங்க ஃப்ரெண்டு நான். என்னால இவ்வளவெல்லாம் செலவழிக்க முடியாது. குறைஞ்ச செலவுல ஒய்.எம்.சி.ஏ. போக வழி சொல்லுங்க பாஸ்!”
‘ஏய்! என்ன ஆளுப்பா நீ!’ என்பதுபோல் ஒருமுறை பார்த்துவிட்டு, ”உங்களுக்குப் பின்னால் ஒரு வழி தெரியுது பாருங்க. அதுவழியாப் போங்க. ஏகப்பட்ட பஸ் டிக்கெட் கெளண்டர் வரும். கத்தரிப்புக் கலர்ல இருக்கிற கெளண்டர்ல போய் 20 தைவானீஸ் டாலருக்கு ஒரு டிக்கெட் வாங்குங்க’.
”இவ்வளவு லக்கேஜ் இருக்கே?”
”இருந்தா என்ன பாஸ்? அவ்வளவையும் ஏத்திக்குவான்.”
”மறக்கவே முடியாத நண்பர் நீங்க.”
”பரவாயில்லை பாஸ்! போயிட்டு வாங்க பாஸ்.”
நொடியில் நெஞ்சு நிறையப் பரவி உச்சியில் உட்கார்ந்து கொண்டார் அந்த டாக்சி டிரைவர்.
தனக்கு வாய்த்த ஒரு வாடிக்கையாளருக்கு இப்படி ஒரு மாற்றுவழி சொல்லித் தருவாரா எந்த நாட்டு டாக்ஸிக்காரராவது?
”நிறைய நன்றி நண்பரே!” அதன்படி செய்தேன். தைவானீஸ் டாலர் மாற்றிக்கொண்டது நல்லதாகப் போயிற்று. பேருந்தும் கத்தரிப்பு நிறத்தில் இருந்தது. பெட்டிகள் வைக்கிற இடம் மகாப் பெரிசு. என்னைப்போல் எவரும் சுமை வைத்திருக்கவில்லை.
ஒரு குள்ளமான தைவானிய ஓட்டுநர், ‘ஊப்!’ என்று ஏதோ எடை தூக்கி பயில்வான்கள் பாணியில் கத்திவிட்டுக் தூக்கி என் பெட்டிகளை உள்ளே தள்ளினார். ‘தள்ளுமுன் இரண்டு ஸ்டிக்கர்களைப் பெட்டியில் ஓட்டினார். அதே எண்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் இரண்டை என் பஸ் டிக்கெட்டின் பின்புறம் ஒட்டினார். டிக்கெட்டில் பாதியைக் கிழித்து எடுத்துக் கொண்டார். நாற்பது பேர் கொண்ட பஸ்ஸில் சுமார் எட்டுப் பேர்கள்தாம் இருந்தோம்.
தெரியாத்தனமாக தைப்பே நகரை இரவில் பார்க்க ஆசைப்பட்டு அவர்பின் உட்கார, எனக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருக்க, ஒரு பிரேக் போட்டார் பாருங்கள்! கிட்டத்தட்ட அவர் இருக்கையில் முதுகில் போய் தூக்கி எறியப்பட்டு மோதிக் கொண்டேன்.
அவர் படு சாதாரணமாக, ”பெல்ட் போட்டுக்கலையா நீங்கள்?” என்றாரே பார்க்கலாம்.
பஸ்ஸிற்கு பெல்டா? போடாட்டி பல்லெல்லாம் கழன்றுடும் போலிருக்கே இங்கே! என்ன ஊரப்பா இது!
சற்றுத் தூரம் போனதும் ”ஒய்.எம்.சி.ஏ. கிட்ட நிறுத்துவீர்கள்ல?”
”சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே நிறுத்துவேன். இறங்கி நடக்கணும்.”
‘சென்ட்ரல் எப்போ வரும்?”
”கவலைப்படாதீங்க. அதுதான் கடைசி ஸ்டேஷன்.”
50 நிமிடப் பயணம். ஊரின் மையப்பகுதியை நெருங்க நெருங்க வண்டி ஆமையாகி, நத்தையாகியது.
சென்ட்ரல் வந்தது. இறங்கினேன். இறங்கியதும்தான் குளிர் அதிகம் என்பதை உணர்ந்தேன். கைப்பெட்டியில் ஸ்வெட்டர் இருந்தது நல்லதாகிப் போனது.
சகபயணி ஓருவரிடம் கேட்டேன்.
”ஒய்.எம்.சி.ஏ.?”
”அதோ தெரியுதே!” என்றார். ஆமாம். தெரிந்தது. ஆனால் ஒரு கிலோ மீட்டராவது இருக்கும். மறுபடி 32+32+8 இவ்வளவையும் தூக்கிக் கொண்டு முக்கால் கிலோ மீட்டரா?
ஸ்வெட்டரையும் மீறி குளிர் தாக்க, காற்று வேறு சுழன்று சுழன்று அடித்து, குளிரைக் கடுமையாக உணரச் செய்தது.
முக்கால் கிலோ மீட்டருக்கு டாக்சி பிடிப்பதா? கொஞ்சத்தூரம், கொஞ்சத்தூரம் நடந்து நடந்து பெட்டிகளை வைத்து வைத்து எடுத்து ஐயோ! என் வாழ்நாளில் இப்படி ஒரு எடைச் சுமையையும் கைவலியையும் உணர்ந்ததே இல்லை.
பார்க்கத்தான் முக்கால் கிலோ மீட்டரே தவிர, நடக்க நடக்க வந்துகொண்டே இருந்தது. பாதசாரிகள் கடக்குமிடத்தைப் பிடிக்க இன்னும் நடக்க வேண்டியிருந்தது. கைகள் கழன்று வந்துவிடும்போல இருந்தது. நீளமான பாதசாரிக் கடப்பு. மூன்று உடைமைகளைத் தூக்கிக் கொண்டு குறுகிய நேரத்திற்குள் ஓடவேண்டும்.
பச்சை விளக்கு எனக்கென எரித்தும் நான் கடக்க விரும்பவில்லை. நீண்ட மூச்சை எடுத்துக்கொண்டு அடுத்த சிக்னலுக்குத்தான் நடப்பது என முடிவு செய்தேன்.
தைவானிய மக்கள் உதவும் உள்ளம் உள்ளவர்களா? எனக்காக எவரேனும் உதவுவார்களா? ஊகும். வீண் எதிர்பார்ப்பு.
அந்தச் சாலைக் கடப்பு ஏதோ பெரிய சாதனைப்போல் பட்டது. கஷ்டப்பட்டு அடைந்த ஒய்.எம்.சி.ஏ. வரவேற்பு அறையிலோ எனக்கு ஓர் ஏமாற்றம் காத்திருந்தது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title
































October 6th, 2008 at 9:23 am
Hi,
I see so many deviations from your report… 200NTD is nothing.. Minimum charge from Airport is 500NTD. Also we have an Taipei_India Assosciation office in New Delhi and India office in Taipei. Thats the Embassy…
Taiwan immi officers are so kind and generous.. I am living here for more than 5 years and travelled to India at-least 40 times.. No Such incidents happen here.
Pl don’t make the officers to behave like what you have written. THey are thousand times better than the sweeper at Chennai Airport.
Prabhu.
October 6th, 2008 at 9:25 am
Hi.. Seat Belts in Bus.. What Bus are you talking about?? No Such Buses available here and sudden break is the End of the Story..
I think you have landed in different part of the world and not Taiwan.
Else, you are proving that you are an Indian.. (Just by Exaggerating)..
Thanks.
Prabhu.
October 7th, 2008 at 2:19 am
tamil varthaikalai padikkamudiyamal padum avasthaiyai ennavendru solluvathu. tamil visaipalagai ennavayitru ?