Friday, 3 Oct 2008

2008/10/03 Lena Katturai

lena.jpgநம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

எனக்குக் கொழுப்பு அதிகம்தான் என்றோ, என்னிடம் கொழுப்பு உண்டு என்றோ இந்த உலகில் ஏற்பவர் உண்டா? அநேகமாய் இல்லை என்று துணிந்து சொல்லலாம்.

நம் வாகனம் சாலையில் செல்பவர் மீது சேற்றை வாரி இரைக்கிறது. ”என்ன, வண்டியில் போகிறோம்கிற கொழுப்பா?” என்கிறார் பாதிக்கப்பட்டவர். நமக்கு, இதுல எங்க கொழுப்பு இருக்கு? நான் பாட்டுக்கு போயிட்டிருக்கேன். சாலையில் கிடக்கிற சேறுக்கு நான் என்ன பண்ணுவேன்? என்றுதான் தோன்றும்.

மழைக்காலத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்ட வேண்டும். அதுவும் சேறும் அது தெறிக்கும் இடத்தில் மனிதர்களும் இருக்கும்போது, அவர்களையும் கவனத்தில் கொண்டு ஓட்ட வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், நம் அவசரத்தையும் நம் சுயநலத்தையுமே கொண்டு ஓட்டுகிறோமே, இதற்குச் சமூகம் இடும் பெயர்தான் கொழுப்பு.

உடம்பில் கொழுப்பை அறிய Lipid Profile என்ற சோதனை உண்டு. இது இரத்தத்தை அலசி ஐந்து வகையான கொழுப்புகளின் அளவீடுகளை அப்பட்டமாகப் படம் பிடித்துத் தந்துவிடுகிறது.

மனக்கொழுப்புகளையும் நாம் ஐந்து விதங்களில் அடக்கலாம். பணக்கொழுப்பு; அதிகாரக் கொழுப்பு; பதவிக் கொழுப்பு; அறிவுக் கொழுப்பு; வாய்க் கொழுப்பு.

உடல்கொழுப்பிலாவது ஒரு நன்மை செய்யும் கொழுப்பு (HDL) உண்டு. ஆனால் மனக்கொழுப்பில் ஐந்துமே கெடுதல்தான்.

என்னிடம் பணம் ஏராளமாக உள்ளது. என்னால் எதுவும் செய்ய முடியும் என்பது பணக் கொழுப்பு.

இந்த எல்லைக்குள் (வீடு, பிற இடங்கள்) நான் வைத்ததுதான் சட்டம் என்று குடும்பப் பெரிசுகள் நாட்டாமைகள் போல் நடப்பது அதிகாரக் கொழுப்பு.

‘நான் இருப்பது சக்திவாய்ந்த பதவி, என்னை மீறி எவன் நடக்க முடியும்? பார்த்துடறேன் அதையும்!’ என்பது பதவிக் கொழுப்பு.

கற்ற கல்வி பணிவும் அடக்கமும் தரவேண்டும் என்பார்கள். இவை இல்லாமல் நடந்துகொள்வதும், மெத்தப் படித்த மேதாவிகள் என்கிற நினைப்பில் பேசுவதும் அறிவுக்கொழுப்பு. எந்தத் தகுதியும் இன்றி வாய்ப்பளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இஷ்டத்திற்குச் சவடால் விடுவது வாய்க்கொழுப்பு. பிறர் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டால் போதும், கொழுப்பு தானாகக் குறையும். மாறாக அடிபட்டு உதைபட்டுக் கொழுப்பைக் குறைத்துக்கொள்வது அறிவுடமை ஆகாது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்! 

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply