Friday, 26 Sep 2008

2008/09/26 Lena Katturai

lena-tamilvanan.jpgமகிழ்வை மட்டும் தேடும் மனமே!

மகிழ்வை மட்டுமே தேடும் மனமே! உனக்கு ஒன்று சொல்வேன் கேள்!

நீ தேடும் மகிழ்வின் பின்னே எத்துணை வேதனைகளும் எத்துணைப் பேரின் வேதனைகளும் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

பணக்காரர்களின் உள்ளத்தைத் தொட்டுப் பேசச் சொல்! ”வசதிக் குறைவாய் இருந்த நாள்களில் இருந்த நிம்மதி இப்போது இல்லை” என்று மனக்கதவு திறப்பார்கள்.

சென்னையில் மாரத்தான் ஓட்டம் ஓடினார்கள். வென்று மகிழ்ந்தவர் இருவர். தோற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். இவர்களை ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் ஆளாக்கியவர்கள் இந்த இருவர் என்று ஒரு கோணமும் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உன் மகிழ்வின் பின்னே எத்துணைப் பேருக்கு வேதனைகளைத் தேடித் தருகிறாய் தெரியுமா? உன் மகிழ்வுகண்டு எத்துணைப் பேர் உன்னால் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றி உனக்கென்ன அக்கறை? உன் மகிழ்வை மட்டுமே பார்க்கும் சுயநலவாதியல்லவா நீ!

எவ்வளவு சுயநலம் உனக்கு! மடியும் என் எதிரிகளின் உடல்களை மிதித்து வெற்றிக் கோட்டைகளைப் பிடிக்கிறாய்! நசுங்கிப் போன உன் எதிரிகளைப் பற்றி உனக்கென்ன அக்கறை?

மனமே! கடவுளிடம் நன்மையே வேண்டுகிறாய்! எல்லாம் நல்லதே நடக்க வேண்டும் என்கிறாய்! எல்லாவிதமான மகிழ்ச்சியையும் நாடுகிறாய். ஒருபோதும் இவை நடந்தது இல்லையே! இன்பங்களையும் துன்பங்களையும் கலந்தேதானே சந்திக்கிறாய்!

அப்படியானால் துனபங்களை எதிர்கொள்ளும் வலிமையை, இவற்றை வென்று சமாளித்து வெளிவரும் ஆற்றலை, போராடும் வலிமையை எனக்குத் தா என்று நீ வேண்டாததான் காரணம் என்ன மனமே?

வியர்வைகளை உதிர்க்காமல் உன் மீது பன்னீர் தெளிக்கப்படுவது எப்படிச் சாத்தியம் என எதிர்பார்க்கிறாய்? முழங்கால் சிராய்ப்புக்கூட இல்லாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆசைப்படுவது எப்படிச் சாத்தியம்? சொல்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்! 

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply