ஹிதேந்திரன் பெற்றோருக்கு ஸ்டாலின் ஆறுதல்
சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று விபத்தில் சிக்கி இறந்த தங்களது மகன் ஹிதேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை திருக்கழுக்குன்றம் மருத்துவத் தம்பதிகள் அசோகன், புஷ்பாஞ்சலி ஆகியோர் தானம் வழங்கி 6 பேர் மறுவாழ்வு பெற உதவினார்கள்.
அவர்களின் இந்த மனிதநேய செயலை அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் சென்று மருத்துவத் தம்பதிகளைச்சந்தித்து, மகனை இழந்து வாடும் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களின் மனிதநேயச் செயலுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
Related Posts Title































