Tuesday, 23 Sep 2008

Raman Thediya Seethai Film Review

ராமன் தேடிய சீதை

raman-thediya-seethai.jpg

நடிப்பு: சேரன், பசுபதி, நிதின் சத்யா, விமலா ராமன், கஜாலா, ரம்யா நம்பீசன், கார்த்திகா, கருணாஸ்.
தயாரிப்பு: மோசர்பேர்/குளோபல் ஒன் ஸ்டூடியோ
இயக்கம்: ஜெகன்நாத்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்

திருமண அழைப்பிதழ் கடை வைத்திருக்கும் சேரனுக்கு திருமணம் ஆவதில் தடை ஏற்படுகிறது. சிறிய வயதில் ஏற்பட்ட மனநிலை பாதிப்பால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாலும் அவர் வார்த்தைகள் திக்… கும். இதை பெண் பார்க்க செல்லும் இடமெல்லாம் மறைக்காமல் கூறுகிறார். இதனால் அவரை திருமணம் செய்ய பெண்கள் மறுத்துவிடுகின்றனர்.

ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதிக்கும் ரம்யா நம்பீசனும் திருமணத்தன்று காதலனுடன் ஓடிப்போகிறார். இதேபோல் விமலா ராமன், கார்த்திகா போன்ற நாயகிகளை பெண் பார்க்கிறார் சேரன். கார்த்திகா, நிதின் சத்யாவை காதலிக்கிறார்.

சேரனை ஏமாற்றிவிட்டு காதலுடன் ஓடிப்போன ரம்யா நம்பீசன் வறுமையில் உழல்கிறார். மற்றொருவரான நவ்யா நாயர் நாகர்கோவிலில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்களில் யாரை சேரன் திருமணம் செய்கிறார் என்பது கதையின் ஒரு பகுதி.

ஆட்டோகிராபில் தான் காதலித்த பெண்களை சேரன் சந்திப்பதுப் போலவே இதில், தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்களைச் சந்திக்கிறார். சேரனின் நடிப்பும் ஆட்டோகிராபில் பார்த்ததுப் போலவே இருக்கிறது. வித்தியாசம்…ஹூம்.

நாயகிகள் ஐவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

பசுபதிதான் டாப். பார்வையற்ற ரேடியோ ஜாக்கி நெடுமாறனாக பிய்த்து உதறுகிறார். அவருடைய, கஜாலா உடனான காதல் ஒரு கவிதை. திரையில் இருந்து இறங்கி வந்தால் நாமும் அவருடன் பேசுவோமே என்கிற நப்பாசையை வரவழைத்திருக்கிறார் பசுபதி .

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு, கார்த்திகாவின் இதயத்தை திருடும் நிதின் சத்யா ஓகே ரகம் தான்.

ஆங்காங்கே சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், மசாலா (மடத்)தனத்துக்கு இடம் தராமல் தரமான விருந்து தான் படைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்நாத்.

Link for Raman Thediya Seethai Audio release Gallery

Related Posts Title


Leave a Reply