Tuesday, 23 Sep 2008
இதயம் கொடுத்த ஹிதேந்திரன்

சென்னை: தாய் தந்தையருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற மகன் விபத்தில் சிக்கினான். மூளை செயல் இழந்ததால் அவனைக் காப்பாற்ற முடியாத நிலை. என்ன செய்வார்கள் பெற்றோர்கள்?
ஹிதேந்திரனின் பெற்றோர் உடனே முடிவு செய்தனர். மகனின் துடிக்கும் இதயத்தை, இன்னொரு உடலில் துடிக்கவைக்க.
ஒளிவேகத்தில் அம்மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தார் காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர்.
அங்கே காத்திருந்த மருத்துவர் குழு வேகமாக செயல்பட்டு, அந்த இதயத்தை நோயாளி ஒருவருக்குப் பொருத்தி மறுவாழ்வு அளித்தது.
இது நடந்தது சென்னையில்.
திருக்கழுகுன்றத்தில் வீடு, கிளினிக் என்று இருக்கும் மருத்துவ தம்பதிகளான அசோகன், புஷ்பாஞ்சலியின் மூத்த மகன் ஹதேந்திரன்(16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தான்.
அன்று சனிக்கிழமை (20/09/08)… பெற்றோருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனைப் பார்க்க கிளம்பினான் ஹிதேந்திரன். வீட்டுக்குத் திரும்புகையில், வீட்டிற்கு மிக சமீபத்தில் மீன்பாடி வண்டி ஒன்றில் தொங்கிய கம்பி ஒன்றில் இடிபட்டு, அதே வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் ஆறாக ஓடியது. அவனோ மயக்கமானான்.
அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், வீட்டிற்கும் தகவல்கொடுத்தனர். தந்தை அசோகன் மருத்துவமனைக்கு விரைந்தார். ஹிதேந்திரா கடைசிவரை விழிக்கவில்லை.
சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு ஹிதேந்திரன் கொண்டுவரப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அடிபட்ட அதிர்ச்சியயில் ஹிதேந்திரனின் மூளை செயலிழந்து விட்டதாகவும் இனியும் செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினர்.
மருத்துவ தம்பதிகள் என்பதால உடனடியாகப் புரிந்து கொண்டனர் அவனுடைய பெற்றோர்.
அவனுடைய உடலுறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.
நேற்று காலை ஹிதேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
கண்கள் சங்கர நேத்ராலயாவிற்கு அனுப்பப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
ஹிதேந்திரனின் இதயம் மேலே சொன்ன வேகத்தில் ஜெ.ஜெ. நகரில் உள்ள் செரியன் இதய மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஒன்பது வயது தமிழ்ச் சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த மனிதநேயத்துக்கு காவல்துறை பக்கபலமாகச் செயல்பட்டது.
ஹிதேந்திரன் என்ற சொல்லுக்கு இதயத்தை கொள்ளை கொள்பவன் என்று அர்த்தமாம்.










































September 24th, 2008 at 1:02 am
Really much appreciated.
God bless them.
September 24th, 2008 at 4:27 am
We dont have a word to say anything. Hats of all.
September 25th, 2008 at 3:46 pm
nothing to say, but the parents still can see thier son,
September 26th, 2008 at 7:24 am
i am happy that this news has been highlighted in the media. as a follow up if you can give info on how to donate organs even before an accident, it will help many.
October 1st, 2008 at 8:02 am
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய ஹிதேந்திரன் பெற்றோர்கள் வாழும் கடவுள்கள்