பூரி உருளைக்கிழங்கு - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 300 கிராம்
பூண்டு - 3 பெரிய பல்
பச்சை மிளகாய் - 6
கடலை மாவு - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 2
செய்முறை
கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும். வெங்காயத்தை உரித்து நறுக்கவும். பூண்டை உரித்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, கடலைமாவை 1 கப் தண்ணீரில் கரைத்துவிட்டு நற்காக கிளறி, கடலை மாவு, பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும். மிகவும் கெட்டி ஆகாமல் கொஞ்சம் தளரவிட்டதுப் போல் இருந்தால்தான் பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ரொம்பவும் கூழ்போல் இருக்கக்கூடாது.
Chettinadu Samayal
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
Related Posts Title































