Wednesday, 17 Sep 2008

Centre does not supply weapons to Srilanka: Thangabalu

இலங்கைக்கு ஆயுத உதவி: காங்கிரஸ்மீது வீண் குற்றச்சாட்டு: தங்கபாலு

செ‌ன்னை: இலங்கைக்கு மத்திய அரசு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. காங்கிரஸ்மீது வீண் குற்றச்சாட்டு கூறவேண்டாம் என்று தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு 27 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தவும், அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதைக் குறிப்பிட்டு பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்ற கருத்தை பொறுத்தவரை, இருகட்சி தலைமைகளும் பேசி முடிவு எடுக்கவேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்தை நான் வரவேற்கிறேன். தமிழக ஆட்சியில் பங்கு குறித்து எங்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில பேசி முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து சோனியா காந்தி முடிவு செய்வார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை தமிழர் மீதான எனது கவலையை தெரிவித்தேன். அதற்கு பாதுகபாப்புத் துறை அமைச்சர் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசிடம்
பேசி வருவதாகவும் சொன்னார்.

இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த நிலையிலும் ஆயுத உதவி செய்யவில்லை. ஆயுதம் வழங்குவதாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். காங்கிரஸ் ஆட்சிமீது யாரும் வீண் குற்றச்சாட்டு கூற வேண்டாம்” என்றார்.

Related Posts Title


One Response to “Centre does not supply weapons to Srilanka: Thangabalu”

  1. Srilanka » 5th Odi,India Vs Srilanka,Full Highlights Part 4

    […] Centre does not supply weapons to Srilanka: Thangabaluஇலங்கைக்கு ஆயுத உதவி: காங்கிரஸ்மீது வீண் குற்றச்சாட்டு: தங்கபாலு. சென்னை: இலங்கைக்கு மத்திய அரசு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை … […]

Leave a Reply