Monday, 15 Sep 2008

Jaya takes oath to remove DMK rule

jayalalithaaகருணாநிதியின் ஆட்சியை முறியடிப்போம்: ஜெ., சபதம்

சென்னை: அண்ணா பிறந்த நாளில், தமிழகத்தில் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முறியடிக்க வீர சபதம் ஏற்போம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி அ.தி.மு.க. வினருக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அன்னைத் தமிழ் உணர்ந்தோர், அறிந்தோர் அனைவரையும் மகிழ்வூட்டும் நாள் அண்ணாதுரை பிறந்த நாள். 15ம் தேதி அவரது நூற்றாண்டு விழா காணும் நாள்.

பிறர் கருத்தை மதிப்பவர். ஆயினும் தன் கருத்தில் உறுதி உடையவர். சூழ்ச்சி வலை பின்னும் தலைவராக அவர் இருந்ததே இல்லை. பாரம்பரியம் பெற்ற காங்கிரஸ் கட்சியை, 1967ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்திக் காட்டியவர் அண்ணாதுரை.

‘இந்த வெற்றியின் மூலம் எனக்குச் சேர வேண்டும் என்று நினைக்கிற அனைத்துப் புகழும் எம்.ஜி.ஆரை மட்டும் தான் சாரும். எனவே, நீங்கள் அனைவரும் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று உங்களது வாழ்த்துக்களைச் சொன்னால், என் கடமையில் நான் உயர்ந்து நிற்பேன்’ என, அண்ணாதுரை கூறியதை, உணர்வுடையவர்கள் ஏற்றனர்.

அண்ணாதுரையின் இதயக்கனியாக விளங்கிய எம்.ஜி.ஆரையே காயப்படுத்தினார்; துன்புறுத்தினார் கருணாநிதி. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன் பெறும் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, நூலகம் அமைத்தல் ஆகிய பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் சுயநலவாதி கருணாநிதியின் மாய் மால ஏமாற்றுக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சென்று, அவரது குடும்ப ஆட்சியை முறியடிக்க வீர சபதம் ஏற்போம்’ என்று கூறியுள்ளார்.

Related Posts Title


Leave a Reply