Friday, 12 Sep 2008

Bangaluru shaked by little EQ

பெங்களூரு நடுங்கியது

பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கெங்கேரி, கோடிசிக்கனஹள்ளி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், ஜே.பி. நகர், மடிவாளா, பொம்மனஹள்ளி ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

காலை 8.50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 1.03ஆக பதிவானது. சுமார் 5 வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது.

8.50 மணியளவில் உண்டான பயங்கர வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் கெங்கேரி பகுதியில் சில வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Posts Title


Leave a Reply