Sunday, 7 Sep 2008

N-deal: US Congress signals to clear

george_bush_.jpgஅணு ஒப்பந்தம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

ந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தம் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் 28 ஆம் தேதிக்குள் ஒப்புதல்பெற அதிபர் புஷ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தத்திற்கு 45 நாடுகளை கொண்ட அணு எரிபொருள் விநியோக அமைப்பு (என்.எஸ்.ஜி.) நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கடுத்ததாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ஆம் தேதி முடிவடைகிறது. புதிய அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 4ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள்ளாக நாடாளுமன்றத்தில் இந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற்றாக வேண்டும்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தற்போதைய கடைசி கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 28ஆம் தேதி முடிவடைகிறது. அதற்குள் அணு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறவேண்டு்ம். சாதாரணமாக ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவது அமெரிக்க நாடாளுமன்றத்தின் வழக்கம். ஆனால் காலம் குறைவாக உள்ள நிலையில் இந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருமாறு எம்.பி.க்களை புஷ் கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.

அமெரிக்காவிற்கு இந்த மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங் செல்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் அணு மூலப்பொருள் விநியோக நாடுகளுடன் இந்தியா கையெழுத்திடும்.

Related Posts Title


Leave a Reply