Friday, 5 Sep 2008
சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
”தெரியாத்தனமாக நண்பரின் காரில் லிப்ட் கேட்டேன். ஏன்தான் பயணம் செய்தேன் என்று ஆகிவிட்டது” - நண்பர்.
”ஏன்?” என்றேன்.
”அவர் காரில் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். ரொம்பவும் அசெளகரியமான பயணம்” என்று மிகவும் அலுத்துக் கொண்டார்.
”காரில் வந்ததன் மூலம் பேருந்து கிடைக்காத அந்தப் பகுதியிலிருந்து தப்பித்து வந்ததும், காசை மிச்சம் பிடித்தும், காலத்தைச் சேமித்தும், நீங்கள் அனைவரும் காரில் அடித்த அந்த ஆனந்தமான அரட்டையும் உங்களுக்கு செளகரியமாகத் தெரியவில்லையா? ஒரு சிறு அசெளகரியத்தை மட்டும் சகித்துக் கொண்டிருந்தால் மற்ற செளகரியங்கள் உங்களுக்குப் பெரிதாகப்பட்டிருக்கும். அந்த ஓர் அசெளகரியம் பெரிதாகப்பட்டிருக்கிறது” என்றேன். நண்பர் திகைத்துப் போனார்.
நாம் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை பல அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவ்வளவையும் வெறுக்கக் கற்றுக் கொண்டால் நம் மகிழ்ச்சி ஒவ்வொரு மணிநேரமும் அடுத்தடுத்த அசெளகரியங்களால் பறிக்கப்பட்டுவிடும்.
வாழ்வின் இனிமைகளைத் தேடிப் பிடித்து, அவற்றை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக் கற்றுக் கொண்டால் அன்றாட அசெளகரியங்கள் பெரிதாகத் தெரியா.
அசெளகரியங்களைத் திரும்பத் திரும்பத் பேசிக் கொண்டிருக்கும் அல்லது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் இயல்பு வாழ்க்கையின் பிடிப்பை அகற்றி, சலிப்பை அதிகப்படுத்தும்.
இந்தச் சலிப்புணர்வு மேலும் பல அசெளகரியங்களைச் சேமிக்க ஆரம்பித்துவிடும். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் நம் திட்டமிடாக் குறைபாடும், முன்னேற்பாடுகள் இல்லாத தன்மையுமே நம் பல அசெளகரியங்களுக்கு மூலகாரணங்கள் என்பது தெரியவரும்.
முன்பதிவு செய்யாமல் இரயிலில் பொது வகுப்பில் இரவு முழுக்க நின்றுகொண்டு பயணம் செய்பவரின் நிலை போன்றது இது.
அசெளகரியத்திலும் மனதளவில் அதில் உள்ள செளகரியங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பண்பும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதே மகிழ்ச்சியை மீட்கும் வழி என்பதை உணரும் இயல்புமே இதிலிருந்து மீளும் நிரந்தர வழி.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்









































