Monday, 1 Sep 2008
கருணாநிதி அ.தி.மு.க.வில் சேரும் காலம் வரும்!: ஜெ.,
சென்னை: கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் எங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கெஞ்சும் காலம் விரைவில் வரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட செல்கணபதியை எப்படி தி.மு.க.வில் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு நேற்று முன்தினம் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நாளைக்கே ஜெயலலிதாவைக்கூட சேர்த்துக்கொள்ளவேண்டிய நிலை வரலாம்… என்ன செய்வது? என்று பதிலளித்தார்.
கருணாநிதியின் இந்த கருத்துக்கு அறிக்கை ஒன்றின் மூலம் இன்று பதிலடி தந்திருக்கிறார் ஜெயலலிதா. அந்த அறிக்கையில் அவர்,
‘கடந்த மாதம் 30ஆம் தேதி அளித்த பேட்டியில், பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அ.தி.மு.க. ஆட்களை அனுப்பி வைத்தது என்று ஓர் அபாண்டமான பொய்யை கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
இவ்வாறு திரும்பத் திரும்ப கருணாநிதி கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொன்ன கருணாநிதி மதச்சார்பின்மை பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டார்.
‘ஜெயலலிதா மீது கூடதான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்’ என்று அதிகார போதையில் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய்ச் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, அதிமுக தலைமை கழகத்துக்கு வந்து என்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் உதவி பெற்றதையெல்லாம் கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.
என் மீது இருக்கும் வழக்குகள் கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்குகள் ஆகும். அதில் 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் நான் விடுதலை பெற்றுள்ளேன்.
வழக்குகளை நேர்மையாக எதிர் கொண்டு ஒவ்வொன்றாக வென்று வருகிறேன். அந்த வழக்குகளை இன்றும் நீதிமன்றத்தில் சந்தித்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னைப் பற்றியோ, என் மீது உள்ள வழக்குகளைப் பற்றியோ பேசுவதை கருணாநிதி நிறுத்திக்கொள்வது நல்லது.
தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. அதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.
அப்போது கருணாநிதி, அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அவரை துதிபாடுபவர்கள் எல்லாம் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று கூறியுள்ளார்.










































September 1st, 2008 at 6:52 am
காலை 10:00 - 2:00, மாலை 04:00-06:00, இரவு 09:00-11:00, அதிகாலை 01:00-04:00
மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள் இவை. இரவு மற்றும் அதிகாலையில் மின்சாரம் நிறுத்தப்படும் நல்லாட்சி இதுதான். இந்நேரத்தில் குழந்தைகளும் முதியவர்களும் படும் பாடு குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு அறிவிக்கப்பட்ட படாத மின்வெட்டை பெற்றி பேசி அறிக்கை விடும் அரசியல் வாதிகளுக்கா தெரியப்போகிறது. கலைஞர் ஆட்சியில் தமிழகம் ஒளிர்கிறதோ இலையோ தமிழன் வயிறு மட்டும் நன்றாக ஒளிர்கிறது.