Perunchithiranar works will be nationalised: Karunanidhi

Posted on Tuesday 30 September 2008

karunanidhi1.jpgபாவலர் பெருஞ்சித்திரனார் நூல்கள் நாட்டுடமை:
சுரதா சிலை திறப்பு விழாவில் கருணாநிதி

சென்னை: உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சென்னை அசோக் நகரில் வெண்கலத்தால் ஆன முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சிலையைத் திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், ‘பாவலர் பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சென்னை அசோக் நகரில் வெண்கலத்தால் ஆன முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

”நானும் சுரதாவும் 1942-43ஆம் ஆண்டுகளில் இருந்து நண்பர்கள். திருவாரூருக்கு பக்கத்தில் சிக்கல் என்ற ஊருக்கு அருகில் பிறந்தவர் சுரதா. அப்போது அவருடைய பெயர் ராஜகோபாலன். ராஜகோபாலன்தான் சுரதாவாக மாறினார். அந்தச் சுரதா என்னுடைய திருமணத்திற்கு எழுதி அச்சடித்து, சிக்கல் என்கிற கிராமத்தில் இருந்து நடந்தே வந்து, திருவாரூரில் மணவிழா மேடையில் வாசித்தளித்த அந்த வாழ்த்துப் பத்திரத்தினுடைய ஓரிரு வாசகங்களை இங்கே கவிஞர் ராஜேஸ்வரி வாசித்துக் காட்டினார்.

உருக்குலையா மங்கை ஒளி முகத்தை முத்தமிட, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை - இவ்வளவு அழகான, செழுமையான, வளமான சொற்களைக் கொண்டு தமிழ் வரிகள் இரண்டை அன்றைக்கு வாழ்த்துப் பாடலாகத் தொடங்கிய சுரதாவை அந்த விழாவிற்கு வந்த அத்தனை பேரும் நிமிர்ந்து பார்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.

அவருடைய பெயர் அமைந்ததிலேயே ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒளிவிடுகிறார். எந்தப் பாரதிதாசன்? கிளம்பிற்றுக் காண தமிழ் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை; வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால், இனி உதை தான் கிடைத்திடும் காண் என்று பாடிய பாரதிதாசன்.

அந்தப் பாரதிதாசனின் மாணவனாக சுரதா அமைந்தார். அந்தப் பாரதிதாசனுடைய அடியொற்றி கவிதைகளை இயற்றினார்.

எப்படி பாரதியாருக்கு தாசன் நான் என்று கனகசுப்புரத்தினம் என்ற அந்தக் கவிஞர்-பாரதிதாசனாக தன்னை மாற்றிக் கொண்டாரோ, அதைப் போல அவருடைய உண்மையான சீடர், சுரதா என்பதற்கேற்ப கனகசுப்புரத்தினத்திற்கு நான் தாசன் சுப்பு ரத்தின தாசன் - அதன் சுருக்கம்
சு ர தா என்றாகி நம்மிடையே உலவினார். அவர் எழுதிய பாடல்களை, அவர் எழுதிய திரையுலக இசைப்பாடல்களை இங்கே பேசிய நம்முடைய புலவர் மாமணிகள் எல்லாம் எடுத்துக் காட்டினார்கள்.

அவரோடு பழகியன் என்ற முறையில், எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு இனிமையானவர் என்பதையெல்லாம் நான் மிகத் தெளிவாக அறிவேன்.

இங்கே நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு வீட்டிலிருந்து திருமாவளவனிடம் பேசும்போது, ”இடி இடிக்கிறதே, மழை பொழியுமா” என்று கேட்டேன். அப்போது அவர், ”பெரிய இடி அல்ல, மேகக்கூட்டம், அவ்வளவுதான். அதனால் வாருங்கள், தைரியமாக வாருங்கள்” என்றார்.

இடி, மழை, மின்னல், சூறாவளி, புயல் இவைகள் எல்லாம் பொதுவாழ்விலே ஈடுபடுகின்றவர்களுக்கு இயல்பாக அவர்கள் சந்திக்க வேண்டிய இயற்கையின் எதிர்ப்புகள். இயற்கையின் எதிர்ப்புகளைவிட, செயற்கை எதிர்ப்புகளும் அவர்கள் சமாளிக்க வேண்டியவை, சந்திக்க வேண்டியவை. அதை நானும் அறிவேன். அனுபவரீதியாக திருமாவும் அறிவார்.

இருவரும் அதை அறிந்திருக்கின்ற காரணத்தினால்தான், ‘மழை வராது, நீங்கள் வந்தால் நின்றுவிடும்’ என்று சொன்னார். சில மகானுபாவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருந்தாலே மழை பொழியாது. வந்தாலே மழை பொழியாது. ஆனால் நாங்கள் மழை வர வேண்டும் என்று எண்ணுகின்ற நேரத்தில், விரும்புகின்ற நேரத்தில் மழை பெய்யும். அப்படி பெய்கின்ற காரணத்தினால்தான் இன்றைக்கு நாடு, தமிழ்நாடு வளமாக இருக்கின்றது.

இன்றைக்கும் நான் சாகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு செய்தி. வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது நான்தான் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனுடைய திறப்பு விழாவிற்கு தேதி தந்து, இன்னமும் ஏழு நாளில் திறப்பு விழா நடைபெறப் போகிறது என்ற நேரத்தில் என் தலைமையிலே இருந்த தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதுவும் உங்களுக்குத் தெரியும்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, அன்றைக்கு இருந்த ஜனாதிபதியைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டபோது, நெருக்கடி நிலை நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து கட்டியன் நான். அமைத்தவன் நான். கணபதி ஸ்தபதியார் என்கிற தலைசிறந்த ஒரு சிற்பியை, அவருடைய சீடர்களை வைத்து வள்ளுவர் கோட்டத்தை அளந்து அளந்து கட்டி முடித்தோம். ஆனால், அந்தத் திறப்பு விழாவிற்கு நான் அழைக்கப்படவில்லை. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டார்கள்.

அப்படி ஒரு நிலை அன்றைக்கு. அதனால்தான் அதற்கு நெருக்கடி நிலை என்றே பெயர். அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் நம்முடைய நிழல்கூட படக்கூடாது என்று எண்ணுகின்ற மிகச்சிறந்த நண்பர்கள் சில பேர், தமிழறிஞர்கள் அந்த மேடையிலே பேசும்போது, என்னைத் தாக்கிப் பேசினார்கள். ஒருவேளை வள்ளுவர் கோட்டத்தைக் கட்டியதற்காக தாக்கிப் பேசியிருக்கக்கூடும்.

அப்படி பேசிய நேரத்திலே ஒரு குரல் பேசாதே என்று சொல்லிக் கொண்டே மேடைக்குச் சென்று பேசியவருடைய வாயை அடைத்தது. அந்தக் குரல்தான் என்னுடைய தோழர், சுரதாவிற்கு சொந்தமான குரல். இதை நான் மறக்க முடியுமா? வாழ்நாள் முடிகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு சம்பவம் அல்லவா?

திருமாவளவன் பேசும்போது, பெருஞ்சித்திரனாருடைய புத்தகங்களை நாட்டுடமை ஆக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் ” என்றார்.

admin @ 11:47 pm
Filed under: news
I worship Hanuman,says Sushil Kumar

Posted on Tuesday 30 September 2008

நான் அனுமன் பக்தன்: சுஷில் குமார் சென்னையில் பேட்டி

சென்னை: நான் தீவிர அனுமன் பக்தன் என்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார் கூறினார்.

சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் நேற்று சென்னை வந்தார்.

பாடி பியூல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ள சுஷில்குமாருக்கு, அவரது சாதனையைப் பாராட்டி அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ1.50 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத் தயாரிப்புகளை ஆயுள் முழுவதும் சுஷில்குமாருக்கு அளிக்கவும் அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுஷில் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

”2004ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் எனக்குக் கிடைத்த தோல்விதான் 2008இல் நான் பெற்ற வெற்றிக்குக் காரணமாகும். பதக்கம் வென்றதன் மூலம் மக்களிடம் எனக்குக் கிடைக்கும் அன்பும் ஆதரவும் என்னை திக்குமுக்காட வைக்கிறது. இதனை ஒருபோதும் மறக்கமாட்டேன். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. நான் வெண்கல பதக்கம் வென்ற பின் நிறைய இளைஞர்களிடம் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

பாராட்டு விழாக்களுக்காக நான் ஊர் ஊராகச் செல்வதால் என் பயிற்சி பாதிக்காது. நான் எங்கு சென்றாலும், அதிகாலை 3.30 மணிக்கே விழித்து விடுவேன். அதன்பிறகு 4 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 2 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடுவேன்.

எனது அடுத்த இலக்கு 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவதுதான். இதற்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டேன்.

அனுமன் பலமிக்கபவன் என்பதால் நிறைய மல்யுத்த வீரர்கள் அனுமன் பக்தர்களாக உள்ளனர். அதேபோல் நானும் அனுமன் பக்தன் தான். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்ற கனவு சமீபத்தில் நிறைவேறியது. சென்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகுகிறார்கள். தமிழக உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் எனக்கு நிரம்பப் பிடிக்கும்” என்றார்.

admin @ 10:40 pm
Filed under: news
World powerful lady Indra Nooyi

Posted on Tuesday 30 September 2008

அதிகாரமிக்க பெண்கள்: இந்திரா நூயிக்கு முதலிடம்

indra-k-nooyi1jpg.jpg

பெப்சி நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி, வர்த்தக உலகில் அதிகாரமிக்கவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலை பிரபல பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. வருகிற 13ஆம் தேதி வெளிவரும் இதழில் இப்பட்டியல் இடம்பெறும்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திரா நூயி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 52 வயதான இவர், சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி, அமெரிக்க விற்பனையில் ஏற்படும் சரிவை சமாளித்து உள்ளதாக பார்ச்சூன் இதழ் குறிப்பிடுகிறது. இப்போது பெப்சி நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 26 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது.

இந்திரா நூயிக்கு அடுத்த இடத்தில் கிராப்ட் புட்ஸ் நிறுவனத்தின் ரோசன் பெல்ட் உள்ளார்.

admin @ 9:52 pm
Filed under: news
180 dead in Jodhpur Samundi temple stampede

Posted on Tuesday 30 September 2008

ஜோத்பூர் நவராத்திரி விழா நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் பலி

180 dead in Jodhpur Samundi temple stampede

ஜோத்பூர்: ராஜஸ்தான் மலைமீது அமைந்துள்ள சாமுண்டி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் இறந்தனர். இதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு மலைமீது அமைந்துள்ள மேகரங் கார்க் கோட்டையில் உள்ளது சாமுண்டி அம்மன் கோயில். நவராத்திரி விழா நேற்று தொடங்கியதையொட்டி அங்கு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கோயிலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.

சாமுண்டி அம்மனுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்ததால் கருவறை சார்த்தப்பட்டது. கருவறை திறந்ததும் அம்மனை தரிசித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் பக்தர்கள் ஒருவரையொருவர் முண்டி அடித்தனர். இதனால் கோயிலின் புறவாசல் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. சத்தத்தை சிலர், குண்டு வெடித்தது என்று கத்தினர். அடுத்த நொடி பக்தர்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது.

அனைவரும் ஒரே சமயத்தில் கோயிலைவிட்டு வெளியேற முயற்சித்தனர். குறுகிய பாதை என்பதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு பலர் ஓடினர். இதனால் மிதிப்பட்டும், மூச்சுத்திணறியும் 180 பக்தர்கள் மாண்டனர்.
இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மேலும் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

admin @ 9:12 pm
Filed under: news
We always support Srilankan Tamils: Karunanidhi

Posted on Tuesday 30 September 2008

இல‌ங்கை‌த் த‌மிழர்களு‌க்காகவே ஆ‌ட்‌சியை இழந்த கட்சி தி.மு.க.: கருணாநிதி 

சென்னை: இல‌ங்கை‌த் தமிழர் பிரச்னைக்காகவே 1991 ஜனவரியில் ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி-ப‌தி‌‌‌ல் அ‌றி‌க்கை‌யி‌ல்,

இல‌ங்கை‌த் தமிழர் பிரச்னைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே?

தி.மு.க. தொடக்கம் முதல் ‌இல‌ங்கை‌த் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாமென்று நினைத்து, இல‌ங்கை‌த் தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் முக்கியமாக இந்தப் போராட்டத்திற்கு அழைக்க வேண்டுமென்று நினைத்து அழைத்திருக்கலாம். அதனால் என்ன? இல‌ங்கை‌த் தமிழர்கள் நன்றாக ‌விஷயம் தெரிந்தவர்கள்.

அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார்? போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். இல‌ங்கை‌த் தமிழர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களை தமிழகத் தலைநகரிலே பேரணி நடத்திக் காட்டி, அவர்களுக்காகப் போராடிய கட்சி தி.மு.க. என்பதையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்த கட்சி தி.மு.க. என்பதையும், இல‌ங்கை‌த் தமிழர் பிரச்னைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பிரச்னையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்பது பற்றி சட்டப்பேரவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன். எப்படியோ உண்ணாவிரதப் பந்தலில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடும் போது 23.4.2008 அன்று சட்டமன்றத்தில் இல‌ங்கை‌த் தமிழர் பிரச்னையையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய தினம் பேசும் போது, ”வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை கடைந்தெடுத்த கயவர்கள் என்று அழைக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாரே?

தமிழை அழித்துக் கொண்டிருப்பவர்களை அப்படி அழைக்கலாம். அதே நேரத்தில் தமிழை நான்தான் வாழவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியவாறு, தன்னுடைய பேத்தியை தமிழ்நாட்டுப் பள்ளிகளிலே கூடச் சேர்க்காமல், டெல்லியிலே கொண்டு போய் ‘மேட்டர் தி கான்வெண்ட்’ என்ற ஆங்கில கல்வி நிலையத்தில் படிக்க வைப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது என்றும் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

‘சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரித்த படத்தை வெளியிடுவது குறித்து பிரச்னைகள் முடிவுற்று, அந்தப் படம் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டு விட்டதாக அவர்கள் பத்திரிகைகளிலேயே செய்திகளும் வந்த பிறகு, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராஜன் கண்டன அறிக்கை விடுத்துள்ளாரே?

பட்டியலில் தங்கள் கட்சியின் பெயர் விடுபட்டு விடக்கூடாதே என்பதற்காக அந்த அறிக்கை விடப்பட்டிருக்கலாம்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவைகளை சாதாரண ஏழை எளிய பொதுமக்கள் வரவேற்கின்ற நிலையில்- ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் அந்தத் திட்டங்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

இந்தத் திட்டங்களுக்கு குறை சொல்கின்ற கட்சிகள் எல்லாம் அடுத்து வரவிருக்கின்ற தேர்தலில் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவதற்குத் தயாராக இருக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கொண்டு வந்து விட்டதே என்ற ஆதங்கத்தில் தான் அதற்கு குறை சொல்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்குத் திட்டத்தின் மீது எந்தக் குறையும் இல்லை’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 8:32 pm
Filed under: srilanka news
Abhiyum Naanum Movie Gallery

Posted on Tuesday 30 September 2008

abhiyum-naanum

Artist: , ,
Direction:
Production:
Banner: ,
Music:

admin @ 7:20 am
Filed under: movie
Leelai Movie Gallery

Posted on Tuesday 30 September 2008

leelai.jpg

Artist: , ,
Direction:
Production: V
Music:
Banner: Aascar Films

admin @ 6:40 am
Filed under: movie
Actor Hemanth Kumar gallery

Posted on Tuesday 30 September 2008

hemanth-kumar.jpg

admin @ 6:09 am
Filed under: Actor
Actress Monika Gallery

Posted on Tuesday 30 September 2008

monika.jpg

admin @ 6:00 am
Filed under: actress
Bharat matrimony.com service in Airtel live

Posted on Tuesday 30 September 2008

ஏர்டெல்லில் பாரத் மேட்ரிமோனியின் திருமண தகவல்கள்!

சென்னை: திருமண தகவல் இணையதளமான பாரத் மெட்ரிமோனி டாட்காம் நிறுவனம், இந்தியாவின் முன்னனி மொபைல் சர்வீஸ் நிறுவனமான ஏர்டெல்லில் திருமண தகவல் சேவைகளை இன்று முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாப் போர்ட்டலான ஏர்டெல் லைவில் இப்போது பாரத் மேட்ரிமோனி சேவை கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஜி.பி.ஆர்.எஸ்.வசதிகொண்ட செல்போன் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது பாரத் மேட்ரிமோனி ட