Friday, 29 Aug 2008
உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று, உணவு. இது இல்லாமல் வாழவே முடியாது என்பதற்காக இதையே வாழ்வின் பிரதானப் பொருளாக எண்ணி, சேர்த்து மாடுகளாய் வாழ்பவர்கள் வாழ்வில் உயரவே முடியாது.
மனிதன் உணர்வுகளாலும் வாழ வேண்டும். உணர்வுகள் இரு வகைப்படும். தவறான உணர்வுகள், நல்லுணர்வுகள். தீவிரவாதம் முதல் கோபம், சுயநலம், சோம்பல், விரோதம் வரை தவறான உணர்வுகளின் பட்டியல் வெகுநீளம். இவற்றை விரித்துரைக்க வேண்டியதில்லை.
நாம் இந்தச் சமூகத்திலிருந்து பலவற்றை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இச்சமூகத்திற்கு என்ன திரும்பச் செய்தோம் என்கிற உணர்வை வளர்த்துக் கொண்டாலே நான் குறிப்பிட்ட அத்துணை எதிர்மறை உணர்வுகளும் காணாதபடி அடிக்கப்படும்.
பிறருக்குப் பயன்படும்படி வாழ வேண்டுமானால் நம்மைச் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிக அவசியம். நாம் வளர வேண்டும் என்கிற விருப்பமே ஒருவனை மனிதனாக மாற்றுகிறது. வளர்ச்சியில் ஏற்படும் தாகம்தான் ஒருவனுக்கு வாழக்கையில் பிடிப்பை ஏற்படுத்துகிறது.
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உணர்வு உள்ளவர்கள் வாழ்வில் பிடிப்பற்றவர்களே. நாம் வளர வளரப் பிற உணர்வுகளும் கிளைகளாய் மலர்கின்றன.கலையுணர்வுகள், படைப்புணர்வுகள், நாட்டுப்பற்று, தமிழ் உணர்வு என்று இவை பலவாறாய்ப் பரிணமிக்கின்றன.
இந்த உணர்வுகளுக்குச் செயலாக்கம் தரப்பட்டால் அதில் காணும் சிறுசிறு வளர்ச்சிகள், கிடைக்கும் அங்கீகாரங்கள் ஆகியவை ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்ற உதவுகின்றன.
நல்லுணர்வுகளுக்கு உயிரூட்டுங்கள். உங்களைச் சொல்லிக் கொள்ளும்படியான மனிதர்களாக ஆக்குபவை நாம் பார்க்கும் ஆக்கபூர்வ உணர்வுகளே!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும









































