Wednesday, 27 Aug 2008

Rangasamy Quit?: New CM to Puducherry!

puducherry_legislative_assembly.jpgபுதுச்சேரி புதிய முதல்வர் யார்?: இன்று முடிவு தெரியும்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து புதிய முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

முதல்வர் ரங்கசாமியை பதவியை விட்டு விலக அகில இந்திய காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியும், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதால் அது குறித்து முடிவெடுக்கவும், காங்கிரஸ் சட்டமன்ற புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்தான் புதுச்சேரியின் புதிய முதல்வராக பதவி ஏற்க முடியும். ஆகையால் முதல்வர் ரங்கசாமியின் பதவி பறிபோகப் போவது உறுதியாகிவிட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

முன்னதாக தனது பதவியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வர் கருணாநிதியையும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசையும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

Related Posts Title


Leave a Reply