Friday, 22 Aug 2008
இரண்டையும் சொல்லி வைப்போம்!
பிறர் செயல்பாடுகளில் குறை காண்கிறோம். அதைச் சுட்டிக்காட்டவும் செய்கிறோம். ஆனால் இந்த உலகில் தங்களை நோக்கிச் சுட்டுவிரல் காட்டப்படுவதைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதனால் ”நீங்க மட்டும் என்ன ரொம்ப ஒழுங்கா?” என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள்.
இப்படி நம்மைப் பார்த்துக் கேட்க முடியாதவர்களோ, நமக்குத் தெரிந்த வட்டத்தில் புலம்பிவிட்டுப் போகிறார்கள். அல்லது மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டு தங்களைத் தேற்றிக் (?) கொள்கிறார்கள்.
ஆக நாம் என்ன நல்ல நோக்கத்தோடு சொன்னோமோ, அது நிறைவேறுவது இல்லை. இவர்கள் எப்படியோ போகட்டும் என்கிற இரகத்தவர்களாக இருந்தால் பரவாயில்லை. இவர்களே நம் அன்புக்குரிய இரத்தச் சொந்தங்களாக இருந்தாலோ, மிக வேண்டியவர்கள் என்கிற வட்டத்திற்குள் இருந்தாலோ நம் நோக்கம் வீணடிக்கப்பட்டதற்காகவும் திசைமாறிப் போனதற்காகவும் நாம் நிச்சயம் வருந்த வேண்டிவரும்.
இத்தகைய சூழ்நிலையில்தான் இரண்டையும் சொல்லி வைப்போம் என்கிற உத்தியைக் கையாள்வது நல்ல பலனைத் தரப்போகிறது.
”என்ன வியாபாரம் செய்கிறீங்கன்னே தெரியலை. கடையின் விளம்பரப் பலகையைப் படிக்கவே முடியலை.
துருப்பிடிச்சு வார்த்தையெல்லாம் அழிஞ்சு போயிருக்குல்ல!” சிறு இடைவெளிவிட்டு, ”உங்களுக்கென்ன! வழக்கமான வாடிக்கையாளர்களே நிறையப் பேர்! அவுங்கள்லாம் பலகையைப் பார்த்தா வரப் போறாங்க? உங்க சேவையைப் பார்த்துத்தான் வர்றாங்க. அதனால் பெரிசா ஒண்ணும் பாதிப்பு இராது.”
”குடும்பத்தை நல்லாக் கவனிங்க மச்சான்! அத்தனை பேருக்கும் உங்கமேல வருத்தமும் எதிர்பார்ப்பும் நிறைய இருக்குல்ல?” சிறு இடைவெளிவிட்டு, ”நீங்களும் என்ன பண்ணுவீங்க? தொழில் உங்களை விடுவனாங்குது? குடும்பத்துக்கு குறை வைக்கக் கூடாதுன்னுதான் பார்க்குறீங்க! வீட்ல இருக்கறவங்களும் உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசினாதானே?”
என்ன இது? இரண்டையும் நாமே சொல்வது முரண்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? ‘இருபுறமும் உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் நான் சொன்னதில் நல்லதை எடுத்துக்கோ’ என்கிற இந்த அணுகுமுறைதான் இன்றையச் சூழ்நிலைக்குச் சரிப்பட்டு வரும்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்









































