Tuesday, 19 Aug 2008
ராஜீவ் கேல் ரத்னா-அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு

டெல்லி: விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை நேற்று முறைப்படி அறிவித்தது மத்திய அரசு. அதன் விபரம் வருமாறு:
ராஜீவ் காந்தி கேல் ரத்னா - மகேந்திர சிங் தோனி (கிரிக்கெட்)
அர்ஜூனா விருதுகள்:
பஜ்ரங்கலால் தாக்கர் (படகுப்போட்டி), அனுப் ஸ்ரீதர் (பேட்மி்ண்டன்), டோம்பி தேவி, சித்ரா கே சோமன் (தடகளம்), அவ்நீத் கௌர் சித்து (துப்பாக்கிச்சுடுதல்), ஜான்ஸன் வெர்கிஸ் (குத்துச்சண்டை), ஹிரிகா ட்ரோனாவெல்லி (செஸ்), பிரப்ஜோத் சிங் (ஹாக்கி), அர்ஜூன் அட்வால் (கோல்ப்), வீரர் அல்கா டோமர் (மல்யுத்தம்), பார்மன் பாட்ஷா (வலுதூக்குதல், ஊனமுற்றோர் பிரிவு)
2008ஆம் ஆண்டுக்கான தியான் சந்த் விருது - தடகள வீரர் ஹக்கம் சிங், ஹாக்கி வீரர் முக்பெய்ன் சிங் மற்றும் மல்யுத்த வீரர் கியான் சிங்
பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா (2007) விருது - சஞ்சீவ் குமார் (வில்வித்தை), ஜக்தீஷ் சிங் (குத்துச்சண்டை), ஜி.இ.ஸ்ரீதரன் (வாலிபால்) ஆகியோர் பெறுகின்றனர்.
கேல்ரத்னா விருது பெறும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜூனா விருது பெறுவோருக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைக்கும்.
விருது வழங்கும் விழா வரும் 29ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கி, வீரர்களை கௌரவிக்கிறார்.
அதே விழாவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.









































