Thursday, 14 Aug 2008
மனச் சிம்மாசனங்கள்!
தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்கிறோம், இவர்களை இருபிரிவினராகப் பிரிக்கலாம். முதலாமவர்கள், நம்மை விரோதித்துக் கொண்டோமே என்று எண்ண ஆரம்பித்து வருந்துபவர்கள், இவர்கள் நம்முடனான நட்பைத் துண்டித்துக்கொள்ள விரும்பாதவர்கள்.
இரண்டாமவர்களோ, என்னையா விரோதித்துக் கொண்டாய்? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று நமக்கெதிராக இயங்குபவர்கள்.
இவர்களாலும் வேறு சிலராலும் நம் சிறப்புகளை நாம் இழக்க நேரிடலாம். இதற்கெல்லாம் நாம் பின்வாங்கி ஓடக்கூடாது. ஓடினால் எதிரிக்கு நாமே வெற்றிக்கனியுடன் இதற்கான கோப்பையையும் விழுந்து கும்பிட்டுக் கையில் கொடுத்து விடுகிறோம் என்று பொருள்.
ஏதும் குறை சொன்னாலேயே, ஏன் விமர்சித்தாலுமே உடனே தங்கள் மதிப்பு, ஆற்றல் ஆகியவை தரையில் போடப்பட்டுக் காலால் மிதித்து நசுக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்கிறவர்கள் உண்டு.
ஒருவரால் நாம் ஆண்டாண்டுகளாகத் கட்டிக்காத்த, வளர்த்த சிறப்புத் திறமைளை காலடிக்குக் கீழே புதைத்துவிட முடியாது.
இது ஒரு நபரின் அல்லது மிகச் சிலரின் கோணமே. நம்மை வியந்து போற்றப் பலரும் தயாராக இருக்கிறார்கள். பிறர் காணும் குறைபாடுகளால் தொய்ந்து போவது என்பது நம் இயல்பாக ஆகுமானால் நம்மால் எழுந்திருக்கவே முடியாது.
நம்மைப் பற்றிய சுயமதிப்பீடுகளை விருப்பு வெறுப்பு இன்றி நிர்ணயித்துக் கொண்டால், அவை பெரும்பாலானவர்களோடும், நம் மனசாட்சிக்கு விரோதம் இன்றியும் அமைந்துவிடுமானால், அதன் பிறகு எவரது விமர்சனங்களிலிருந்தும் ஆக்கபூர்வமான யோசனைகளை மட்டுமே அடிக்கோடிடத் தோன்றும்.
வேறுவகையில் சொல்வது என்றால், நம் மனத்திற்குள் நாம் சிம்மாசனம் அமைத்துக் கொண்டு விட்டோமேயானால் அதைப் பறிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்









































