» 2008 » August .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Chennai Marathon

Posted on Sunday 31 August 2008

சென்னை மாரத்தான்: கர்நாடக வீரர், கேரள வீராங்கனைக்கு முதலிடம்

chennai-marathon

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மாரத்தான் போட்டியில் கர்நாடக வீரர் சந்தோஷ் குமார், கேரள வீராங்கனை பிரீஜா ஸ்ரீதரன் ஆகியோர் முறையே ஆடவர், மகளிர்க்கான 21.09 கிலோ மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.

அவர்களுக்கு சான்றிதழ்களுடன் ரூ.10லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

ஏழைக் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளுக்கு நிதி திரட்ட கிவ் லைப் அமைப்பு இந்த மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.

4 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொண்டனர். 21.09 கிலோ மீட்டர் போட்டியில் சுமார் 1,500 பேர் கலந்துகொண்டனர்.

கோட்டை அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மெரீனா கடற்கரை வழியாக பெசண்ட்நகர் கடற்கரை சென்று திரும்பும் படியாக ஓட்டப்பாதை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் கர்நாடக வீரர் சந்தோஷ் குமார் 1 மணி 4 நிமிடம் 3 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற சுரேந்திரா சிங் 2ஆம் இடத்தைப் பிடித்தார். சந்தீப்குமார் என்பவர் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.

மகளிர் பிரிவில் கலந்துகொண்ட 100 பேரில் கேரளாவைச் சேர்ந்த பிரீஜா ஸ்ரீதர் இந்த தூரத்தை 1 மணி 18 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடித்து முதல் இடம் பிடித்தார். பிரீதி எல். ராவ் 2ஆவது இடத்தையும், கவிதா ராட் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

2 மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ. 5லட்சமும், ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான போட்டியில் ஆடவர்களுக்கான ஆடவர் பிரிவில் பி. நாகேந்திரராவ் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்பட்டது. மகளிர் பிரிவில் எம்.சுதா முதலிடம் பிடித்தார்.

முன்னதாக கோட்டை அருகே காலை 6.30 மணிக்கு ஹால்ப் மாரத்தான் (21.09 கி.மீ.) ஓட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் (21.09கி.மீ) போட்டியில் கலந்துகொண்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருவல்லிக்கேணியில் தங்கியிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இவர் போட்டியில் பெசண்ட் நகர் சென்று திரும்பும் இடத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் சந்தோஷ்.

இந்த மாணவரின் இறப்பை ஈடுகட்ட முடியாவிட்டாலும், அவருடைய தந்தை முருகேசனிடம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார் கிவ்லைப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜெ. மனோகரன்.

admin @ 11:31 pm
Filed under: news
Angry on DMK govt never change: Vaiko

Posted on Sunday 31 August 2008

vaiko அரிசி விலை குறைப்பு: மக்களின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது: வைகோ

சென்னை: நியாய‌விலை‌க் கடைக‌ளி‌ல் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்க‌‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது ம‌க்களை ஏமா‌ற்று‌ம் வேலை எ‌‌ன்று ம.‌‌தி.மு.க. பொது‌ச் செயலாளர் வைகோ கு‌ற்ற‌‌ம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘தற்போது ‌நியாய‌விலை‌க் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி விலையை இரண்டு ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்திடும் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு ரூ.500-க்கு மளிகைப் பொருட்கள் வாங்கிய ஏழைக் குடும்பத்தினர் இன்றைக்கு அதே பொருட்களை 2500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அளவிற்கு விலைவாசி விஷம்போல் ஏறியுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வீடு கட்டும் கனவு தகர்க்கப்பட்டு கம்பி, சிமெண்ட் விலை நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எல்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ன் கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாடும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது.

ஏழை- நடுத்தர மக்களை விலைவாசி உயர்வால் ஏங்க வைத்து விட்டு, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏமாற்று வேலையாகும். இதனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 
 

admin @ 10:31 pm
Filed under: news
Change the EB minister: Ramadoss

Posted on Sunday 31 August 2008

மின்சாரத் துறையின் படுதோல்வி:
அமைச்சரை மாற்ற ராமதாஸ் யோசனை

 
சென்னை: த‌மிழக‌ம் இரு‌ளி‌ல் மூ‌ழ்குவதை தடு‌க்க மின் ஆளுமையில் திறமையும், இந்த துறையில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துகிற ஒருவரை மின் துறை அமைச்சராக நியமிக்க முதல்வர் முன்வரவேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
 
இதுகுறித்து அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல்,

‘அனைத்து தரப்பினருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டிய மாநில அரசு, மின் தட்டுப்பாட்டுக்கும் மின் தடைக்கும் என்ன காரணம் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்க்க முடியாதது எனக் கூறி மின்சாரத் துறையின் படுதோல்வியை மறைக்க அரசு முயன்று கொண்டிருக்கிறது.

ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கால அளவுக்கு மின் சக்தியை திட்டமிட்டு வழங்கி வந்தால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல் நிலையை சமாளிக்க முடியும்.

ஆனால், அப்படி முறையாக செயல்படுத்தாததால் செல்வாக்கு மிக்கவர்கள் குறுக்கு வழியில் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி உயர் அழுத்த மின் சக்தியை முறைகேடாக பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையே இருளில் மூழ்கடித்து வருகிறார்கள் என்றும், இந்த முறைகேட்டை தடுக்க முடியாதபடி அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளொன்றுக்கு 10 முதல் 20 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால், வரும் தீபாவளி தமிழக மக்களுக்கு இருட்டு தீபாவளியாகத்தான் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

புதிய அறிவிப்புகளால் இந்த நெருக்கடியில் இருந்தும், அரசின் தோல்வியில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட முடியும் என்று கருதி விடாமல், மின் ஆளுமையில் திறமையும், இந்த துறையில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துகிற ஒருவரை மின் துறை அமைச்சராக நியமித்து அதன் மூலம் தமிழகம் இருளில் மூழ்கிவிடாமல் தடுக்கவும் முதல்வர் முன்வரவேண்டும்’ எ‌ன்று  கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 10:12 pm
Filed under: news
Power cuts: Karunanidhi may face the election: Jaya

Posted on Sunday 31 August 2008

jayalalithaa மின் நெருக்கடி: சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு:
தேர்லைச் சந்திக்கலாம்: ஜெயலலிதா யோசனை

சென்னை: தமிழகத்தை இருளில் தள்ளிக் கொண்டிருக்கும், மின் நெருக்கடியை சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு, சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல்,

‘தற்போது தமிழ்நாட்டில் ‘அறிவிக்கப்பட்ட மின்வெட்டு’, ‘அறிவிக்கப்படாத மின்வெட்டு’ என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போதைய மின் நிலைமைக்கு தி.மு.க. அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

அரசு சொல்லும் 2ஆவது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப்படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.

நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந்தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இன்னும் சில காரணங்களான ‘குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது’, ‘மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது’ போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 9:46 pm
Filed under: news
Official power cut?: TN govt explains

Posted on Sunday 31 August 2008

‌மி‌ன் வெ‌ட்டு?: த‌‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!
 
சென்னை: த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌க்குமாறு‌ த‌மிழக அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌விள‌க்க‌‌ம்:

த‌மிழக‌த்த‌ி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு த‌‌‌மிழக அரசு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌த்து வரு‌கிறது. இ‌ந்த அரசு பொறு‌ப்பே‌ற்ற ‌பி‌ன் ‌மி‌ன்வா‌ரிய‌ம் மூலமாக மூ‌ன்று ‌நிலைய‌ங்களை ‌நிறுவுவத‌ற்கு ப‌ணி‌க‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் 600 மெகாவா‌ட் ‌திற‌ன் கொ‌ண்டவையாகு‌ம்.

ம‌த்‌திய அர‌சி‌ன் கொ‌ள்கை‌‌யி‌ன் படி 4,000 மெகாவா‌ட் ‌திறனு‌ள்ள அ‌ல்‌ட்ரா மெகா பவ‌ர் ‌பிராஜ‌க்‌ட் ஒ‌ன்‌றினை செ‌ய்யூ‌ரி‌ல் ‌நிறுவுவத‌ற்கு த‌மிழக அரசு முடிவெடு‌த்து‌ள்ளது.

த‌மி‌ழ்நாடு ‌மி‌‌ன் வா‌ரிய‌த்த‌ி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டிலு‌ள்ள ‌மி‌ன் உ‌‌ற்ப‌த்த‌ி ‌நிலைய‌ங்க‌ள் ‌‌திறமையாக இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. எ‌னினு‌ம் ‌பி‌ன்வரு‌ம் காரண‌‌ங்களா‌ல் ‌மி‌ன் ‌‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை.

தெ‌ன்மே‌ற்கு பருவமழை போ‌திய அளவு இ‌ல்லாததா‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ங்‌க‌ளி‌ல் கட‌ந்த ஆ‌ண்டை ‌விட த‌ற்போது ‌நீ‌ரி‌ன் அளவு க‌ணிசமாக குறை‌ந்து‌ள்ளது. மேலு‌ம் இதர தெ‌ன் மா‌நில‌ங்க‌ளிலு‌ம் ‌மி‌ன் ‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை எ‌ன்பதா‌ல் தெ‌ன்னக க‌ட்டமை‌ப்‌பி‌ன் செய‌ல்பாடு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌நில‌க்க‌ரி ம‌ற்று‌ம் யுரே‌னிய‌ம் த‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல் நெ‌ய்வே‌லி ம‌ற்று‌ம் இதர ம‌த்‌திய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிலை‌ய‌ங்க‌ளி‌லிரு‌ந்து பெற‌ப்படு‌ம் ‌மி‌ன்சார‌த்‌தி‌ன் அளவு 50 சதவிகிதம் குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சில‌ ‌தின‌ங்களாக கா‌ற்றாலைக‌ள் மூல‌ம் பெற‌ப்படு‌ம் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியு‌ம் 1,500 மெகாவா‌ட் குறை‌ந்து‌ள்ளது. ‌பிற மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌‌ங்க மு‌ன்வ‌ந்த போ‌து‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌‌ப்‌பி‌லிரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌ங்க மு‌ன் வ‌ந்த போது‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌ப்‌பி‌லிரு‌ந்து கூடுதலாக ம‌ி‌ன்சார‌ம் பெறவு‌ம், ம‌‌த்‌திய ‌மி‌ன் ‌நிலைய‌‌ங்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌ம் த‌மிழக அரசு, ம‌த்‌திய அரசை கோ‌ரியு‌ள்ளது.

செ‌ன்ற மாத‌ம் ஏ‌ற்கனவே ‌மி‌ன் ‌‌வி‌நியோக‌த்‌தி‌ல் ‌சில க‌‌ட்டு‌ப்பாடுகளை அரசு அ‌றி‌வி‌த்தது. அவை முறையாக ஜூலை 21ஆ‌ம் தே‌தி முத‌ல் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டன. ‌‌நிலைமை ‌சீரான போது ‌பல க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்‌‌ப‌ட்டன.

ஆனா‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌பி‌ன்னடை‌ந்து‌ள்ளதா‌ல் ‌சில க‌ட்டு‌ப்பாடுகளை நடைமுறை‌ப்படு‌த்துவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கி‌றது. அனை‌த்து பொது ம‌க்களு‌ம் ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் ஒ‌த்துழை‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

‌நிலைமை ‌‌சீரடை‌ந்த உட‌ன் இ‌க்க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்படு‌ம். மாணவ‌ர்க‌ள் படி‌ப்பத‌ற்கு‌ம், ‌வீடுக‌ளி‌ல் மாலை நேர தேவை‌க்கு‌ம் ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்குவது அர‌சி‌ன் தலையாய நோ‌க்கமாகு‌ம். எனவே ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌ம் மாலை 6 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை ‌மி‌ன்சார‌த்தை பய‌ன்படு‌த்துவதை த‌‌வி‌ர்‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறது.

இ‌ச்சமய‌த்த‌ி‌ல் ‌மி‌ன்னா‌க்‌கிகளை பய‌ன்படு‌த்து‌ம் தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு உத‌வி செ‌ய்ய அரசு முடிவ‌ெ‌டுத்து‌ள்ளது. வ‌ர்‌த்தக மைய‌ங்க‌ளிலு‌ம், பொது ‌விழா‌க்க‌ளிலு‌ம் தேவைய‌ற்ற ஆட‌ம்பர ‌விள‌க்குகளை அமை‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் பொது ம‌‌க்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள் என கூறப்பட்டுள்ளது.

admin @ 9:26 pm
Filed under: news
Problem solved in Jammu

Posted on Sunday 31 August 2008

அமர்நாத் பிரச்னைக்குத் தீர்வு: ஜம்முவில்  போராட்டம் வாபஸ்

ஜம்மு: அமர்நாத் யாத்திரை காலத்தில் மட்டும் அரசு நிலத்தை அமர்நாத் கோயில் வாரியம் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அமர்நாத் நில விவகாரத்துக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டதால் 61 நாட்களாக நடந்தவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அமர்நாத் கோயிலுக்கு காஷ்மீர் அரசு 100 ஏக்கர்  நிலம் வழங்கியது. இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றது. அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கிய உத்தரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.

இதனால் காஷ்மீர் மாநிலம் முழுக்க கடந்த 61 நாட்களாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் நடந்தேறின. அமர்நாத் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சி குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண டாக்டர் பிளோரியா தலைமையில் நான்கு பேர் குழுவை காஷ்மீர் ஆளுநர் வோரா அமைத்தார். இந்தக் குழு அமர்நாத் சங்கர்ஷ் சமிதி பிரதிநிதிகளுடன் பேசச்சுவார்த்தை நடத்தியது.

3 சுற்று பேச்சுவார்த்தையிலும்பலன் கிடைக்கவில்லை. 4 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. 9 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுக தீர்வு ஏற்றபட்டது.

அதன்படி அமர்நாத் யாத்திரை காலத்தில் பலாட், தோர்மலி பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் யாத்திரிகளுக்கு தேவையான வசதிகளை அங்கே ஏற்படுத்தித் தரவும் அனுமதி வழங்கப்படுகிறது.

அமர்நாத் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டதால், அங்கு போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அங்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது.
 

admin @ 9:08 pm
Filed under: news
Nedumaran slams Karunanidhi

Posted on Saturday 30 August 2008

nedumaranதுரோகம் இழைத்தவர் கருணாநிதி… நானல்ல! - நெடுமாறன் தாக்கு

சென்னை: காமராஜர், எம்.ஜி.ஆர், மூப்பனார், நெஞ்செழியன் ஆகியோருக்கு துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நாளிதழ் ஒன்றில் நெடுமாறன் எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக முதல்வர் கருணாநிதி, தடித்த வார்த்தைகளால் ஆன கவிதைக் கணையை நெடுமாறன் மீது தொடுத்தார்.

அந்தக் கணையை முறித்துப்போடும் வகையில் நெடுமாறன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
 
‘அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 3:22 am
Filed under: news
Chiru’s problem solved

Posted on Saturday 30 August 2008

chiruசிரஞ்சீவியின் சிக்கல் தீர்ந்தது!

டெல்லி: பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தவர் வாபஸ் பெற்றதால், சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்யம் கட்சியைப் பதிவு செய்ய இருந்த தடை நீங்கியது.

சிரஞ்சீவி கடந்த 26ஆம் தேதி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து கட்சியைப் பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் அதே பெயரில் ஏற்கனவே சென்ன கிருஷ்ணா என்பவர் விண்ணப்பித்திருந்ததால் சிரஞ்சீவியின் கட்சிப் பெயரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்ன கிருஷ்ணா, தேர்தல் ஆணையத்தை அணுகி தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக கூறி மனு செய்தார். இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியின் பிரஜா ராஜ்யம் பெயரை பதிவு செய்ய வழி பிறந்தது.

admin @ 2:05 am
Filed under: news
One kg rice for a Rupee from Sep.15: CM

Posted on Saturday 30 August 2008

karunanidhiசெ‌ப்ட‌‌ம்ப‌ர் 15 முத‌ல் 1 ரூபா‌ய்‌க்கு 1 ‌கிலோ அ‌ரி‌‌சி!:
இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - கருணா‌நி‌தி
 
சென்னை: அண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி செ‌‌‌ப்ட‌ம்ப‌ர் 15ஆ‌‌ம் தே‌தி முத‌ல் ‌நியாய ‌விலை‌க்கடைக‌ளி‌ல் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, இன்று மாலை நட‌க்கு‌ம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை அ‌ண்ணா அ‌றிவால‌யத்‌தி‌ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்ச‌ரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமையில் இன‌்று நடைபெற்றது.

இ‌ந்தக் கூ‌ட்ட‌த்த‌ி‌ல்,

‘தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் கிலோ 2 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது’ எ‌ன்று ‌‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்‌ப‌ட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி,

”ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் மூலம் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனா‌ல் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 400 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்” என்றார். 
 

admin @ 1:33 am
Filed under: news
Holiday due to Orissa incidents is illegal: VHP

Posted on Friday 29 August 2008

Five people, including Swami Laxmanananda Saraswati, a top leader of the Vishwa Hindu Parishad (VHP), were shot dead in an ashram in Orissa’s Kandhamal district by an armed group during Janmashtami festival celebrations Saturday (23/08/08) the police said. Over 20 armed people attacked at the ashram at Jalespata village, at about 8 p.m. and started firing.ஒரிசா: விடுமுறை அளித்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: வேதாந்தம் கோரிக்கை

சென்னை: ஓரிசா மாநில சம்பவங்களுக்காக கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளி்ப்பது சட்ட விரோதம் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ். வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அரசாங்கத்தின் உதவிபெற்றும், தங்களது மாணவர்களிடம் கல்வி கட்டணம் பெற்றும் கல்வி நிறுவனங்களை நடத்திவரும் கிறிஸ்தவர்கள் ஒரிசா சம்பவங்களுக்காக அவற்றிற்கு விடுமுறை விடுவது சட்டவிரோத செயலாகும்.

இது மாணவர்களிடையே வகுப்புவாத உணர்வை தூண்டும் செயலாகும்.

சுவாமி லட்சுமணானந்தா கொல்லப்பட்டதற்கு அந்தப் பகுதியில்வாழ்கின்ற கிறிஸ்துவர்களே காரணம் என்று மலைவாழ் மக்கள் நம்புகிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் உள்ள, நியாயமாகச் சிந்திக்கும் அன்பர்கள் ஒரிசாவின் சில பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதை ஒப்புக்கொள்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சுவாமி லட்சுமணானந்தா மீது கிறிஸ்தவர்கள் கடந்த 1971, 1995, 2007 ஆகிய ஆண்டுகளில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை தேசிய அளவிலான பிரச்னையாக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் முயற்சி செய்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் இந்து மாணவர்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையி்ல் உள்ளனர். எனவே இந்தப் பள்ளிகளுக்கு ஒரிசா சம்பவங்களைக் காரணம்காட்டி விடுமுறை அளிப்பது கண்டிக்கத்தக்க, சட்டவிரோதமான செயலாகும். இந்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கேட்டுக்கொள்கிறது’ என்று கூறியுள்ளார்

admin @ 11:51 pm
Filed under: news