Thursday, 31 Jul 2008

2008/08/01 Lenavin Parvayil

manmohan-singh.jpgகாங்கிரசின் புதுக் கணக்கு

மத்திய அரசு கவிழாமல் தப்பித்தது, கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களைப் பொறுத்தவரை மிக நல்ல செய்தி.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்பாராத ஒரு தேர்தல் வலிந்து திணிக்கப்படுவதை எந்த ஓர் உண்மைக் குடிமகனாலும் ஏற்க முடியாது.

நாடும், விலைவாசியும் போகிற போக்கில் குடியரசுத் தலைவராக இருக்கும் அம்மணியால் எதையும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இரு சிறந்த நிதி நிர்வாகிகள் இருந்தே சாதிக்கமுடியாத இந்த நிலைமையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மட்டும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இரு சிறந்த நிதி நிர்வாகிகள் இருந்தே சாதிக்கமுடியாத இந்த நிலைமையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மட்டும் சமாளிக்க முடியுமா? என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்களின் ஆழ்மனக் கேள்வியாகும்.

பாவம் கம்யூனிஸ்டுகள், இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நாட்டிற்குச் சற்றும் பொருந்தாத ரஷ்ய, சீனக் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிப் பார்த்தார்கள். நடக்கவில்லை என்றதும், அதைப் பாதியில் கைகழுவிவிட்டு அடிப்படை கம்யூனிச சித்தாந்தங்களை ஒரு கலப்படமான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

சீனக் கம்யூனிசமும் ரஷ்யக் கம்யூனிசமும் அடிப்படைகளில் நிறைய வேறுபடுபவை. ஆனால், இடதுசாரிகளும் வலது சாரிகளும் கூட்டணி அரசைக் கவிழத்து நாட்டின் நிலைமையைக்கூட நிற்கதியில் நிறுத்தத் தயாரானார்கள். ஆனால் ஜம்பம் சாயக் காணோம்.

மன்மோகன் சிங் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தார். எங்கள் அரசுக்கு ஆபத்து இல்லை என்று ஜப்பானியப் பயணத்தின்போதே உறுதிபடப் பேசினார்.

இதிலிருந்து மற்றவர்கள் போட்ட கணக்கு வேறு. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு என்பது தெளிவாகத் தெரிகிறது.

குதிரைப் பேரம் மாநிலங்களில் நடக்கும். கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசில் நடந்ததாக அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எதிர்க்கட்சிகள் என்னதான் பாராளுமன்றத்தின் மேசையில் பணக்கட்டுகளைக் கொண்டுவந்து கொட்டிக் காட்டினாலும், மன்மோகன்சிங் கேட்டதுபோல் நிரூபணங்கள் இல்லை.

அதே நேரத்தில் -

பாராளுமன்ற உறுப்பினர்களை வசீகரிப்பதில் தவறுகளே நடக்கவில்லை என்று உறுதிபட கூறவும் முடியவில்லை.

பலரை வாக்களிக்காமல் பார்த்துக் கொண்ட சாமர்த்தியமும் காங்கிரசுக்கே உரியது.

ஒரு வழியாக கம்யூனிஸ்டுகளின் மிரட்டல்களுக்குத் தீர்வு ஏற்பட்டுவிட்டது. நித்தியகண்டம் பூரண ஆயுசு என்கிற அத்தியாயம் ஓய்ந்துவிட்டது.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தவறில்லை; ஆனால், சில அம்சங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பாரதிய ஜனதா, காங்கிரசை கவிழ்க்கத் தம் அரசியல் எதிரிகள் உருவாக்கிய சந்தர்ப்பத்தை நன்கும், தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது. பாவம் கனவு தகர்ந்ததுதான் மிச்சம்.

அரசியல் நெருக்கடிகளிலிருந்து வெளிவந்துள்ள காங்கிரஸ், இனி அணு ஒப்பந்தத்தைத் திட்டமிட்டபடி நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாட்டு மக்கள் இதற்கு நிச்சயம் ஆட்சேபிக்கப் போவது இல்லை.

ஆனால், இவர்களது அக்கறையெல்லாம் விலைவாசிகளைக் குறைக்கும் முயற்சியில் காங்கிரஸ் புதுக்கணக்குப் போடுமா என்பதுதான்!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


Leave a Reply