Tuesday, 29 Jul 2008
மர்மயோகியில் நடிக்க கஜோல் வித்தியாசமான நிபந்தனை

கமல்ஹாசன் இயக்கி நடிக்கவுள்ள மர்மயோகி திரைப்படத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோல் நிபந்தனை விதித்துள்ளார்.
மர்மயோகி திரைப்படப்பிடிப்பை அடுத்துமாதம் தொடங்குகிறார் கமல். இதில் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகை பத்மப்ரியாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.
தனக்கு ஜோடியாக நடிக்க நடிகை கஜோலை கேட்டிருக்கிறார் கமல். கமல் ஏற்கனவே தனது மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார் கஜோல். மர்மயோகியில் கஜோல் நடித்தால் அவர் மின்சார கனவுகள் திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கும் தமிழ்த் திரைப்படமாக மர்மயோகி இருக்கும்.
கஜோல் கமலுடன் நடிக்க ஒரு நிபந்தனை போட்டிருக்கிறார். அதாவது, தான் நடிக்கும் காட்சிகள் இந்தியாவில் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். தனது மகளை பிரிந்து இருக்கமுடியாது என்பதால் இந்த நிபந்தனையாம். இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் மை நேம் இஸ் கான் என்ற திரைப்படத்தில் நடிக்கவும் இதே ரீதியில் நிபந்தனை போட்டிருக்கிறாராம் கஜோல்.
கமலுடைய மர்மயோகி திரைப்படத்தின் சில காட்சிகள் சுவிட்சர்லாந்திலும், ஷாருக்கானின் திரைப்படத்திற்கான சில காட்சிகள் அமெரிக்காவிலும் எடுக்கப்பட உள்ளன.
கஜோலின் நிபந்தனையால் கமலும் ஷாருக்கானும் தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பதாக தகவல்.









































