Thursday, 24 Jul 2008
காசோலை மோசடி: இயக்குநர் ஆபாவாணனுக்கு 6 மாத சிறை
சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் ஆபாவாணனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊமை விழிகள், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆபாவாணன். இவர் பெசன்ட் நகரில் பிரேமா வரதராஜூலு என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிரேமா வரதராஜூலு தாக்கல் செய்த மனுவில்,
‘என்னுடைய வீட்டில் மாத வாடகை ரூ.26 ஆயிரம் என்ற அடிப்படையில் கடந்த 2002 ஆண்டு முதல் ஆபாவாணன் குடியிருந்து வருகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைத் தரவில்லை. அவரிடம் கேட்டதற்கு 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலை அளித்தார்.
அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதுகுறித்து கேட்டதற்கு அவர் ஏதும் பதில் சொல்லவில்லை. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஜார்ஜ் டவுன் 7ஆவது பெருநகர மாஜிஸ்ட்ரேட் ரவி, ”செக்மோசடி நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஆபாவாணனுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.

































May 3rd, 2010 at 7:49 am
no it cant be