Friday, 18 Jul 2008

Vishal, Trisha in love?

vishal.jpg

விஷால் - த்ரிஷா காதலா? என்பதுதான் இப்போது தலைப்புச் செய்தியே! சமீபத்தில் இவர்கள் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல் விருந்து ஒன்றில் எதேச்சையாக நயனும் சிம்புவும் திடீர் பிரசன்னமாக சிம்பு நயன் காதல் மீண்டும் பத்திக்கிச்சோ என்ற கேள்வி எழும்பியது. சிம்பு நயன் சந்திப்பு ஏதோ எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததுபோன்ற தோற்றத்தை உருவாக்கியதே த்ரிஷாதான் என்றும் தகவல் பரவியது. சிம்புவுடன் நயனைக் கோர்த்துவிட்டால் கோலிவுட்டில் தனக்கான பாதை தெளிவாகிவிடும் என்று கணித்தே இந்த ஏற்பாட்டை த்ரிஷா செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சந்திப்பு நிகழ்வின் பின்னணி என்ன கேள்வி அம்பு இப்போது த்ரிஷா மீதே திரும்பியிருக்கிறது.

அது, விஷாலுடன் த்ரிஷா காதலா என்ற கேள்வியை எழுப்பி விட்டிருக்கிறது. இந்தக் காதல் சமாச்சாராம் கிளம்பியதுமே இருவரும் அதை மறுப்புத் தெரிவித்து அணைத்திருக்கிறார்கள். புகைவது என்றைக்காவது பற்றி எரியாதா என்ன?

Related Posts Title


Leave a Reply