Friday, 18 Jul 2008
கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு?: நடிகை லட்சுமி ராய் பேட்டி
கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்த் உள்பட பலருடன் தனக்கு இருப்பது நட்பு மட்டுமே என்கிறார் நடிகை லட்சுமி ராய்.
இதுகுறித்து மேலும் லட்சுமிராய் கூறுகையில்,
”நடிகை என்பதால் பல விழாக்களில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சிலருடன் நட்பு ஏற்படுகிறது. உடனே காதல் என்று கிசுகிசு கிளம்பிவிடுகிறது. கிரிக்கெட் வீரர்களான டோனி, ஸ்ரீசாந்த் உள்பட பலரும் எனக்கு நண்பர்களே.
நட்புரீதியாகப் பழகுவதில் என்ன தவறிருக்கிறது? பிரகாஷ் ராஜ் சாருடன் கூட கிசுகிசுத்தார்கள். அவர் எவ்வளவு சீனியர்?
சினிமாவில் இப்போது பிஸி என்பதால் கிசுகிசு குறித்தெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பதில்லை. தற்போது நான் இந்தியில் ஹே குஜ்ஜு, கன்னடத்தில் இயக்குநர் ரமேஷின் படத்தில் நடித்து வருகிறேன்.
ஜெயம் ரவியுடன் நான் நடித்துள்ள தாம் தூம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது. கதை கேட்காமல் நடித்ததால் ஆரம்பத்தில் கோட்டை விட்டேன். இனி அந்த மாதிரி தவறுகளை செய்யமாட்டேன்” என்கிறார்.

































