Friday, 18 Jul 2008
லட்சியவாதிகள் வாழ்வது கடினம்!: மர்மயோகி கமலின் மர்மப் பேச்சு
‘சுயநலவாதிகள் நிறைந்த உலகில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம்’ என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
”தசாவதாரம் திரைப்படம் பரவலாக மக்களால் ரசிக்கப்படுகிறது. சிலர் விமரிசிக்கிறார்கள். படைப்பொன்றை தருவது மட்டும் தான் எங்கள் வேலை. அதை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் விருப்பம். தசாவதாரத்தில் நானும் சில தவறுகளை செய்துள்ளேன். ஒரு திரைப்படத்திற்கு விவாதம் நடத்துவதை நல்ல விஷயமாகவே நினைக்கிறேன்.
லட்சியவாதிகள் வாழ்வது கடினம் என்று என்னுடையத் திரைப்படங்களில் சொல்லி வருகிறேன். இவ்வாறு சொல்வது ஏன் என்று கேட்கிறார்கள். சுயநலவாதிகள் நிறைந்த இந்த உலகில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம்தான். அதையும்மீறி அவர்கள் முன்னேற வேண்டுமானால் மனதளவில் பலம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும்.
ஆரம்பத்தில் சில கொள்கைகளை கடைப்பிடித்தபோது எனக்கும் பிரச்னைகள் ஏற்பட்டன. தைரியத்தால்த்தான் என்னால் அதில் நிலைத்திருக்க முடிகிறது.
மர்மயோகி திரைப்படம் ஏழாம் நூற்றாண்டு சரித்திர கதை. பெரும்பொருட்செலவில் இத்திரைப்படம் தயாராகிறது. அடுத்தமாதம் படப்பிடிப்பு தொடங்கும். இதை அனைத்து வகை ரசிகர்களையும் கவரும் வகையில் எடுப்பதுதான் எங்கள் நோக்கம்” என்கிறார்.










































