Friday, 18 Jul 2008
கிரிக்கெட்: டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவிற்கே வாய்ப்பு: ரணதுங்கா
சென்னை: இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கா கூறினார். தற்போது இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கிறார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்னைவந்துள்ள அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது,
”டெஸ்ட் போட்டடியைப் பொருத்தவரையில் இந்தியா முன்னணி அணியாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது. உதட்டளவில் சொன்னால் இலங்கை அணி வலுவாக உள்ளது. உள்ளத்தில் இருந்து சொன்னால் இந்தியாவே வலுவான அணி என்பதோடு அந்த அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது எனலாம்.
டெஸ்ட்போட்டி மெதுவாக அழிந்துவருகிறது. இது கிரிக்கெட் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். ஓராண்டில், ஓர் அணி 15 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே ஆடவேண்டும். டெஸ்ட் போட்டிகளை அதிகரிக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
ரணதுங்காவுடன் இலங்கை பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் வந்திருந்தார்.
































