Friday, 18 Jul 2008
பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
மனிதர்கள் செய்யும் கொடுமைகளுள் சித்தி கொடுமைதான் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்களால் அதிகமான அளவில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இளவயதுமுதல் வாழ்வில் பாடாய்ப்படுத்தும் மனிதர்களைக் கடந்து வந்துதான் ஆகவேண்டும். இன்னமும் பாடாய்ப் பட்டுக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. இவர்களிடமிருந்து சிலருக்கு விடுபட வழியே இல்லை. இது உறவின் வட்டத்திலோ, தொழில் வட்டத்திலோ அமைந்துவிடும்போது, இவன் தப்பிக்க இயலாதவனாக ஆகிவிடுகிறான்.
இதுவே வீட்டுக்காரர் (House Owner) கொடுமை; அண்டை நிலத்தான் கொடுமை; கடன்காரன் கொடுமை என்றால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தப்பித்துவிட வாய்ப்பு உண்டு.
மேலதிகாரி கொடுமை என்றால்கூட அவருக்கோ, பாதிக்கப்பட்டவருக்கோ இடமாற்றம் ஏற்படும்போது, இத்தகைய கொடுமைகள் தற்காலிக இரகங்களாகவோ ஆகிவிடுகின்றன.
தொழிற்பங்குதாரரின் கொடுமை என்றால், தொழிலிருந்து வெட்டிக்கொண்டு விலகிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் மாமியார் கொடுமை; மருமகள் கொடுமை; கணவனின் கொடுமை; மனைவியின் கொடுமை; பிள்ளைகளின் கொடுமை; பெற்றோரின் கொடுமை என்கிறபோது இந்த அனுபவம் பொறியில் சிக்கிய எலியின் கதைபோல் ஆகிவிடுகிறது.
தப்பிக்கவே வழிதெரியாத நிலைமை உருவாகிவிடுகிறபோது நம் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பாடாய்ப் படுத்தும் மனிதர்கள் நமக்குள் பக்குவத்தை வளர்க்கும் ஆசான்களாகிறார்கள். எல்லோர் வாழ்வும் அவரவர் விருப்பம்போல் அமைவது இல்லை. உலகியலின் துன்பங்கள் இவ்வளவு மோசமானவையா என்று சுயமாகக் கேள்வி கேட்டு விடை தேடுமளவு நமக்குச் சிலர் வாய்க்கிறார்கள். இவர்களை எதிர்கொள்ள நாம் சகிப்புத்தன்மையையும், பொறுமையையும் நம்மையுமறியாமல் வளர்த்துக்கொள்கிறோம். அதன்பிறகு எவ்விதத் துன்பமும் நமக்கு ஒன்றும் செய்வதில்லை. இதன் பிறகு எந்தக் கஷ்டமும், எவ்விதச் சோதனையும் நமக்குக் கொசுக்கடிகளே! பாடாய்படுத்துபவர்களே! உங்களுக்கு எங்கள் நன்றி!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்









































