Saturday, 12 Jul 2008
12/07/2008 சுருக், நறுக் செய்திகள்…
வேதாரண்யத்தில் 2 மீனவர்கள் சுட்டுக் கொலை!: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.
இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்தக்கோரி, விஜயகாந்த் தலைமையில் ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் போராட்டம்
சென்னையில் 30 ரவுடிகளுக்கு காவல்துறை வலைவீச்சு: தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை.
அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்னை இடங்கள் கிடைக்காது. அத்வானி பிரதமராக ஆதரவு: கருத்துக்கணிப்பு முடிவு
உறவினர்களின் பெயரில் 96 வீடுகளை வாங்கினார் மாயாவதி!: சி.பி.ஐ. தகவல்.
அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.100: தமிழக அரசு அறிவிப்பு.
அணுசக்தி ஒப்பந்தத்தை 6 மாத காலம் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அவசரமாக நிறைவேற்றக் கூடாது: ஜெயலலிதா.
மகாராஷ்டிரா… அதிகாரிகளுக்கு மிரட்டல்: ராஜ்தாக்கரேவை கைது செய்ய உத்தரவு.
இலங்கையில் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி: விடுதலைப்புலிகள்தான் காரணம்- இலங்கை இராணுவம் சொல்கிறது.
சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் உள்பட 500பேர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நாட்டின் பணவீக்க விகிதம் 11.89 ஆக உயர்வு. அடுத்த இருவாரங்களில் 13 சதவிகிதத்தைத் தொடும்!
நாளை…கவிஞர் வைரமுத்து பிறந்தநாள். முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப்பெறுகிறார்.
ஆப்பிரிக்க இளம்பெண்ணுக்கு, இருதய துடிப்பை அரை மணி நேரம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை!: சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசை தோற்கடிப்போம்: இடது சாரிகள் உறுதி.
6ஆவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ. இரயில்வே சங்கம் அறிவிப்பு.









































