 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
ஜி.மோகன், கோவை.
|
 |
‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி அரசியலில் இப்போது இருக்கிறாரா?
|
 |
இல்லாமல் எங்கே போகிறார்? ஒற்றையடிப்பாதையில் போய்க் கொண்டிருப்பதை விட்டு விட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இவர் வர வேண்டும்.
|
|
 |
 |
டி.ரங்கன், சென்னை-18.
|
 |
அரசியல்வாதிகளின் தற்போதைய சிந்தனை?
|
 |
யார், யார் சில்லரை வணிகம் செய்வது? யார், யார் ரிலையன்ஸ் போல் வியாபாரம் செய்வது என்பதுதான்?
|
|
 |
 |
 |
 |
ஏ.மார்த்தாண்டம், தாம்பரம்.
|
 |
மத்திய-மாநில அரசுகளின் இன்றைய மக்கள் நல அறிவிப்புகள் பற்றி ?
|
 |
இந்த அறிவிப்புகளுக்கு மாலை வாங்குவதா, மலர் வளையம் வாங்குவதா என்று மக்கள் குழம்புகிறார்கள். எல்லாம் அந்த அறிவிப்புகளின் ஆயுளைப் பற்றிய யோசனைதான்!
|
|
 |
 |
 |
 |
எம்.லோகநாதன், வில்லிவாக்கம்.
|
 |
உங்கள் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகத் தருவீர்களா?
|
 |
எழுத்தாளர்களை இந்தச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இப்படி ஓசி கேட்டால் எங்கே போவது. அந்தக் காலத்தில் புலவர்களை ஆதரிக்க மன்னர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் புரவலர்கள் தென்படுவதே அரிதாக இருக்கிறது!
|
|
 |
 |
 |
 |
எஸ்.பி.சிவகுமார், சூளைமேடு.
|
 |
நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவீர்களா?
|
 |
வந்தால் போச்சு! பத்திரிகைக்கு நீங்கள் சந்தாதாரராகிவிட்டால் அடுத்த கணமே நான் ‘டோர் டெலிவரி’தான்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.சேதுபதி, சென்னை-78.
|
 |
இனி தொல், திருமாவளவன்?
|
 |
பல இரத்த வங்கிகளை நாடிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தேவை இப்போது புதுப்புது இரத்தங்கள்.
|
|
 |
 |
 |
 |
என்.சுவாமிநாதன், சீர்காழி.
|
 |
கூட்டணி உடையும் என்று எப்போது கணித்தீர்கள்?
|
 |
‘தோழமைக் கட்சிகள் தொல்லை கொடுத்தால் அவர்களோடு வருகிற தேர்தலில் கூட்டணி இருக்காது’ என்று ஆற்காட்டார் கடந்த வருடமே சொன்னாரே, அப்போது!
|
|
 |
 |
 |
 |
ஆர்.துரைவேலு, மதுரை.
|
 |
ராமதாஸும், கலைஞரும் ராசியாகிவிடுவார்களா?
|
 |
மல்யுத்த வீரர்கள் சண்டையிடு முன் கைகுலுக்குவதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்கென்னவோ இவர்கள் கை குலுக்கும் எதிரிகளாகிவிட்ட மாதிரி தான் தெரிகிறது.
|
|
 |
 |
 |
 |
வி.நடராஜன்,நெசப்பாக்கம்.
|
 |
இதயத் துடிப்பிலேயே சார்ஜ் ஆகிற மாதிரி செல்போனைக் கண்டுபிடித்திருக்கிறார்களாமே?
|
 |
இந்த பாட்டரி வெடிக்காது இல்லையா?வெடித்தாலும் இதற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வராது. எனவே, யோசித்துதான் வாங்க வேண்டும்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.திலீப், சென்னை.
|
 |
தமிழகத்தில் அடுத்து எந்த டி.வி. உதயமாகும்?
|
 |
இப்போது நாம் பார்ப்பது வெறும் சாதா கலைஞர் டி.வி! இனி, புரட்சிக் கலைஞர் டி.வி.தான் வரவேண்டியிருக்கிறது. அதுதான் (நாட்டில்) பாக்கி!
|
|
 |
 |
பி.தேவராஜ், செங்கல்பட்டு.
|
 |
மத்தியக் கூட்டணியில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?
|
 |
கூட்டுக் குடும்பங்களில் நடக்கிற ஓரகத்தி சண்டைதான்! இது அரசியல் என்பதால் கொஞ்சம் விரசமாய்த் தெரிகிறது.
|
|
 |
 |
 |
|
 |
 |
எம்.பாரதி, சென்னை-17.
|
 |
தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு ‘கள்’ சாப்பிட்டால் நல்லதாமே?
|
 |
யாரோ உங்களைப் பனங்கற்கண்டாக்கப் பார்க்கிறார்கள். பதநீரைக் கூழ்ப் பதனியாக்கி, நாற்பது நாட்கள் வைத்திருந்தால், அதுதான் பனங்கற்கண்டு. எனவே சாப்பிடுங்கள் (பனங்கற்கண்டை!)
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாண்டியன், செஞ்சி.
|
 |
பெரியோர் அறிவுரைகளை இன்றைய சிறியோர் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்களே?
|
 |
பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதன் பலன் இனிப்பு என்பது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியவில்லை. இது பாகற்காயின் குற்றமில்லை; பந்தியில் அமர்ந்திருப்பவர்களின் குற்றம்.
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
கே.கண்ணன், அரும்பாக்கம்.
|
 |
இந்திய வாக்காளர் சுகமாக இருக்கிறாரா?
|
 |
இப்போதுதான் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடம்புக்கு சக்தி வராவிட்டாலும் பிசியோதெரபி செய்து அவரது ஆள்காட்டி விரலுக்காவது சக்தியை வரவழைப்பார்கள்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.அம்புஜம், திருச்சி-2.
|
 |
ஜெயலலிதா புடவைக்கு மேல் அணிகிறாரே, ஒரு வக்கீல் உடைபோல அது இனி நிரந்தரம்தானா?
|
 |
கொட நாடு செல்லுங்கள். இயல்பான சேலையுடன் பாட்டரி காரை ஓட்டியபடி வலம் வரும் வித்தியாசமான ஜெயலலிதாவை அங்கு காணலாம்.
|
|
 |
 |
 |
 |
கே.ரங்கராஜன், முசிறி.
|
 |
தசாவதாரம் பார்த்தீர்களா?
|
 |
கமல் மகத்தான் கலைஞர். நமக்குக் கிடைத்த அரிய சொத்து என்பதை மீண்டும் உணர நல் வாய்ப்பு. பிய்த்தெடுக்கிறார். பாதிக்கு மேற்பட்ட அவதாரங்களில் முகமூடி போட்டுக் கொண்டு வருகிற செயற்கைத் தனம் தலைதூக்கி நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். என்னை மிகக் கவர்ந்தவர் ஆந்திர கமல். கிராபிக்ஸைத் தெவிட்டாமல் தர முடியும் என்று நிரூபித்திருக்கிற படம் தசாவதாரம். (ஷங்கர் தெவிட்டச் செய்வதில் நம்பர் ஒன்!) கதையில், சம்பவங்களில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாமரனைக் கவரத் தவறிய மேல்தட்டு மக்களை ஈர்த்திருக்கும் படம் இந்த அவதாரம்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.ரவி, செய்யாறு.
|
 |
காங்கிரசின் உண்மையான எதிரிகள் யார்?
|
 |
பெட்ரோல், டீசல், அமெரிக்கா!
|
|
 |
 |
 |
 |
எஸ்.ஜெகன்னாதன், தர்மபுரி.
|
 |
ரியல் எஸ்டேட் உலகம் எப்படி இருக்கிறது?
|
 |
என் மும்பை நண்பர் பேசினார். நியூவாஷிக்காரர். சதுர அடி 5000 ரூபாய் இருந்த அடுக்குமாடி வீடு 3500 ஆகக் குறைகிறது என்கிறார். வாங்குபவர்கள் அமுக்கமாக இருக்கிறார்கள். விற்க எண்ணுபவர்கள் மண்டிவிடாத குறைக்கு ஆளாகி விட்டார்கள். மொத்தத்தில் ‘டல்லு’தான். ஆனால் வாங்கிப் போட இதுவே சிறந்த தருணம் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது.
|
|
 |
 |
ஆர்.அஷ்ரப், கொல்கத்தா.
|
 |
காஷ்மீரில் அமர்நாத் நில விவகாரம் பெரிதாகிவிட்டதே?
|
 |
கலந்து பேசாமல் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கொடுத்த விலை இது. கொந்தளிப்பு பூமியில் ஒரு நுணுக்கமான பிரச்னையை எப்படிக் கையாள்வது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டமே!
|
|
 |
 |
 |
 |
டி.ராஜன், திருப்பதி.
|
 |
ஸ்பெயின் உலகக் கோப்பையைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்த்தீர்களா?
|
 |
பேபே! பேபே! பே! பே!
|
|
 |
 |
 |
 |
எஸ்.பாலகிருஷ்ணன், கம்பம்.
|
 |
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகள் என்னை மிகவும் பாதிக்கின்றனவே, என்ன செய்யலாம்?
|
 |
உங்களை மட்டுமா? கோடிக் கணக்கானவர்களைப் பாதிக்கிறது. தேர்வு நேரத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைக் கூடக் குறைக்கவல்லவை இத்தோல்விகள். இதற்கு நல்ல தீர்வு ஒன்று உள்ளது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்திய வெற்றிகளின் சதவிகிதம் 37 மட்டுமே. வெற்றிகளை அபூர்வமாகவே அளிப்பார்கள். இதற்கு மட்டும் மகிழ்வது என்று வைத்துக் கொள்ளுங்கள். தோல்வியெல்லாம் என்னைப் பாதிக்காது என்று மனத்திற்குள் சொல்லிக் கொள்ளுங்ள். விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம். இதற்கு நம் மனம் ஓட்டடை கட்ட அரம்பிப்பது எந்த வகையில் நியாயம்!
|
|
 |
|
|