Tuesday, 8 Jul 2008

Indo-US nuclear deal: Left withdraws support

கதை முடிந்தது!: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்… இடதுசாரிகள் அறிவிப்பு

டெ‌ல்‌லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் திரும்ப பெற்றுவிட்டன.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌த்தை நடைமுறைப்படுத்த, இறுதி செய்ய சர்வதேச அணு ச‌க்‌தி கழகத்தை (IAEA) அணுகுவோ‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌‌ரி‌வி‌த்ததை அடு‌த்து, ம‌த்‌திய அர‌சி‌‌ற்கு‌த் தா‌ங்க‌ள் அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதாக இடதுசா‌ரி கட்சிகள் இன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த இடதுசா‌ரிக‌ள் ஆலோசனை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த், நாளை ‌குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை‌ச் ச‌‌ந்‌தி‌த்து த‌ங்க‌ளி‌ன் ஆதரவு ‌வில‌க்க‌ல் கடித‌த்தை அ‌ளி‌க்க உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சர்வதேச அணு ச‌க்‌தி கழகத்தை அணுகுவோ‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றிவிட்ட ‌நிலை‌யி‌ல், 10ஆ‌ம் தே‌தி நட‌க்கவு‌ள்ள ஐ.மு.கூ.- இடதுசா‌ரிக‌ள் உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌க் கூ‌ட்ட‌ம் அ‌ர்‌த்தம‌ற்றது எ‌ன்று கூ‌றிய ‌பிரகா‌ஷ் கார‌த், வெளியுறவுத்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி‌க்கு இடதுசா‌ரிக‌ள் சா‌ர்‌பி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ஒரு கடித‌ம் அனு‌ப்ப‌ப்படு‌ம் என்றார்.

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக வெளியுறவுத் துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியு‌ம், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌‌சி‌ங்கு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கரு‌த்து‌க்க‌ள் ஒ‌ன்று‌க்கொ‌ன்று முரணாக உ‌ள்ளது எ‌ன்று இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌யி‌ன் தே‌சிய‌ச் செயல‌ர் டி.ராஜா கூறியுள்ளார்.

Related Posts Title


Leave a Reply