Monday, 7 Jul 2008
ஜி-8 மாநாடு இன்று தொடக்கம். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகளின் கூட்டமைப்பான இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, மெக்சிகோ உள்பட 5 நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பு. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோகைடோவில் ஜி-8 மாநாடு நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 30 பேர் பலி!
தமிழ்நாடு காங்கிரஸ், புதிய தலைவராக தங்கபாலு நியமனம்: கிருஷ்ணசாமி நீக்கம்!
தமிழ்நாட்டில் மேலும் 77 இன்ஜினீயரிங் கல்லூரிகள்: 17 ஆயிரம் இடங்கள் அதிகம் கிடைக்கும்.
சைதையில் பெயிண்டர் கொலை: பெண் தாதா கிருஷ்ணவேணியின் மகன் கைது. போலி குற்றவாளிகள் சரண்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை சவாரி.
மேட்டூர் அணையில் பாதுகாப்பு சுவர்: ரூ.1.55 கோடியில் பணிகள்.
அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி: கடலில் சென்று குடும்பம் நடத்துவோம், வேலைநிறுத்தம் தொடரும் என்று மீனவர்கள் அறிவிப்பு.
சி றுநீரக சிகிச்சைக்கு பணம் இல்லை: தற்கொலைக்கு அனுமதி கேட்டு கொல்கத்தா தம்பதிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு.
அமெரிக்க அதிபரானால் ஈராக் போருக்கு முடிவு: பராக் ஒபாமா உறுதி
ஆதரவை வாபஸ் பெற்றால் சபாநாயகர் பதவியை விட்டு விலகுவார் சோம்நாத்சட்டர்ஜி: மார்க்சிஸ்ட் கட்சி தகவல்.
சமாஜ்வாடி -காங்கிரஸ் சுயநல கூட்டணி!: பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கைய நாயுடு தாக்கு.
மலேசியாவில் இருக்கும் 5 இந்தியத் தலைவர்களை விடுவிக்க முடியாது: மலேசிய உள்துறை அமைச்சர் சையத் அமீது அறிவிப்பு.









































