Tamilvanan » Blog Archive » Shriya pair with Kamalhasan

Shriya pair with Kamalhasan

மர்மயோகி கமலுக்கு ஜோடி ஸ்ரேயா?

சென்னை: ‘சிவாஜி’ யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா ‘மர்மயோகி’ யில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில்,

”அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் நான் நடித்த ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகஸ்டு மாதம் அது திரைக்கு வரும்.

தமிழில் விக்ரம் ஜோடியாக ‘கந்தசாமி’ யில் நடித்து வருகிறேன். அதற்கடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் திரைப்படம்.

தந்தை, மகளுக்கு இடையே நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து ஜக்குபாய் கதை பின்னப்படுகிறது. இதில் நான் சரத்குமாரின் மகளாக நடிக்கிறேன்.

கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருக்கும் மர்மயோகி திரைப்படத்தில் நடிக்க பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

Related Posts Title

Tags: , , , , , ,

Leave a Reply