Saturday, 5 Jul 2008

Karthic alliance with A.D.M.K.!

அ.தி.மு.க. வுடன் கூட்டணி? எதுவும் நடக்கலாம்!: கார்த்திக் சூசகம்

மதுரை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணிச் சேரும் வாய்ப்பு இருப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் சூசகமாகத் தெரிவித்தார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

”கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன. மக்கள் பிரச்கைகளுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார். கெளரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தேவையானது. இந்த ஒப்பந்தம் நிறைவேற கூட்டணிக்கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

தற்போது பார்வர்டு பிளாக் கட்சிகள் பெயரில் உள்ளவர்கள், முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் ஆகியோரின் பெயர்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்”  என்றவர்,

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ”அரசியலில் எதுவும் நடக்கலாம்!” என்று பதில் அளித்தார்.

Related Posts Title


Leave a Reply