அணு சக்தி ஒப்பந்தப் பிரச்னை: மத்திய அரசுக்கு 4ஆம் தேதி ஆதரவு வாபஸ். இடதுசாரிகள் இறுதிகெடு.
இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் ஆனால் மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு உறுதி: டெல்லியில் முலாயம் ஆலோசனை.
ரூ. 7,290 கோடி திட்டம். கடலூரில் கப்பல் கட்டும் துறைமுகம், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் கருணாநிதி.
மத்திய அரசு - லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி.
கிரிக்கெட்: அயர்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியுசிலாந்து சாதனை.
உளியின் ஓசை திரைப்படம். கருணாநிதி பார்த்தார். உடன் கமல், ரஜினி பார்த்தனர்.
லாரிகள் வேலைநிறுத்தம்: காய்கறி, அத்தியாவசியப் பொருட்களை பேருந்து, இரயிலில் அனுப்ப ஏற்பாடு. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.
27 சதவிகித இட ஒதுக்கீடு: கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை ரூ.4.6 லட்சமாக உயர்த்த சிபாரிசு. தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அறிக்கை.
மெரினா கடற்கரையை அழகு படுத்தும் பணி ஜனவரியில் முடியும்: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்.
ரூ.10 கோடி மோசடி புகார்: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட அரசு ஒதுக்கிய நிலத்தில் முறைகேடு: தலைமைச் செயலக அதிகாரி தம்பியுடன் கைது.
53ஆவது ஆண்டு விழாவையொட்டி 2 ஆயிரம் ஏழை மாணவிகளைத் தத்தெடுக்கிறது பாரத ஸ்டேட் வங்கி.
காஷ்மீர் அமர்நாத் கோயில் விவகாரம்: பாரதீய ஜனதா சார்பில் நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்.
சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய அஞ்சல்வழி பட்டம் செல்லுமா? இன்று முடிவு தெரியும்.
பெரியாறில் புதிய அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை: கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேம சந்திரன்.
Related Posts Title































