Friday, 2 May 2008

‘சிவாஜி’, ‘அழகிய தமிழ் மகன்’ ஆகிய படங்களின் மூலம் ஸ்ரேயாவுக்கு கிடைத்த புகழை சுடச்சுட காசாக்கி கொள்ளும் விதமாக ஸ்ரேயா தெலுங்கில் நடித்த ‘பகீரதா’ எனும் தெலுங்குப் படத்தை தமிழில் ‘ஜில்லா’ எனும் பெயரில் டப் செய்து வருகின்றது - ஸ்ரீ செளமிதா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம். இதற்கு புண்ணியவான்கள் சிலர் ஏதோதோ காரணத்திற்காக தடை வாங்கி ஸ்ரேயாவின் ‘ஜில்லா’வை தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிட முயற்சித்தனர். ஆனால் அந்த தடையை தராமல் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு ‘ஜில்லா’ படக்குழுவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதில் சந்தோஷத்தில் இருக்கிறது ஸ்ரேயா தரப்பு!
ரசூல் எனும் பிரபல தெலுங்கு இயக்குநர் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு 82 பின்னணிக்குரல் கலைஞர்கள் சுமார் 45 நாட்கள் பின்னணி பேசி முழுபடத்தையும் முடித்துக் கொடுத்துள்ளனர். இப்படி இத்தனை சிறப்புகளை உடைய இந்த டப்பிங் படத்திற்கு ‘இளவட்டம்’ படத்தின் இயக்குநர் ராஜராஜன்தான் தமிழில் வசனம் எழுதியுள்ளார் என்பது விசேஷம்!.









































