Friday, 18 Apr 2008

”தாம்’னா அமைதி ‘தூம்’னா வேகம்’ என்று விளக்கம் தரும் தாம்தூம் நாயகன் ஜெயம்ரவிக்கு அந்தத் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கங்கனா ராவத் மேல் ஒரு இது என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. அந்த மாதிரி பேச்சு எழுந்ததுதான் தாமதம், சுதாரித்துக்கொண்ட இந்த பேச்சுலர் ‘அப்படியெல்லாம் இல்லப்பா’ என்று மறுத்தார். கங்கனா தரப்பில் பதில் ஏதும் வரவில்லை. ஒருவேளை தமிழ் சினிமாவின் இளமையான, துடிப்பான நடிகரோடு தான் கிசுகிசுக்கப் படுவதை கங்கனா ராவத் ரசிக்கிறாரோ என்னமோ.









































